இந்த பரபரப்புக்கு முடிவாக, இது டெல்லி மாநில அரசின் பட்ஜெட் என உறுதி செய்யப்பட்டது. ரூ.1,03,700 கோடி மதிப்பிலான இந்த செலவுத் திட்டத்தை ரேகா குப்தா சட்டசபையில் வெளியிட்டார். கல்வி மட்டுமின்றி, மாநகராட்சி மற்றும் நீர்வழங்கல் துறைகளுக்கும் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி மாநகராட்சிக்கு ரூ.11,666 கோடியும், டெல்லி ஜல் போர்டுக்கு ரூ.9,000 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. நகர கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சாலைகள், மின்கம்பிகள் மற்றும் முக்கிய திட்டங்களுக்கு தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூசி இல்லாத சாலைகள் மற்றும் மின்கம்பிகளை நிலத்தடியில் மாற்றும் பணிகள் முக்கியமாக கவனிக்கப்பட்டுள்ளன.