காசிரங்காவில் தென்பட்ட கோல்டன் டைகர்! உலகிலேயே வெறும் 30 தான் இருக்கு!

Published : Apr 09, 2025, 03:30 PM ISTUpdated : Jul 16, 2025, 04:17 PM IST

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காசிரங்கா தேசிய பூங்காவில் காணப்படும் அரிய தங்கப் புலியின் படங்களைப் பகிர்ந்துள்ளார். 2014-ல் முதன்முதலில் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட இந்த அரிய உயிரினத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

PREV
15
காசிரங்காவில் தென்பட்ட கோல்டன் டைகர்! உலகிலேயே வெறும் 30 தான் இருக்கு!
GOLDEN TIGER spotted in Kaziranga National Park, Assam

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் காணப்படும் ஒரு அரிய தங்கப் புலியின் கவர்ச்சிகரமான படங்களைப் பகிர்ந்துகொண்டார். தனித்துவமான அரிய உரியினமான தங்கப் புலியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

25
GOLDEN TIGER spotted in Kaziranga National Park, Assam

இந்தியாவில் முதன்முதலில் 2014ஆம் ஆண்டில் தங்கப் புலி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது வழக்கமான புலியின் அரிய மரபணு மாறுபாடு அடைந்த இனமாகும். தனித்துவமான வெளிர் தங்க நிற ரோமங்கள் மற்றும் கோடுகள் மூலம் இவை அடையாளம் காணப்படுகின்றன. இந்த அரிய வகை புலி உலகிலேயே வெறும் 30 மட்டுமே இருக்கிறது என்று கூறப்படுகிறது.

35
GOLDEN TIGER spotted in Kaziranga National Park, Assam

அமைச்சர் சிந்தியா அரிய வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான தேவையை வலியுறுத்தினார். புகைப்படக் கலைஞர் சுதிர் சிவராம் எடுத்த படங்கள் புலியின் அற்புதமான தோற்றத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், வடகிழக்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் செழுமையை நினைவூட்டுகின்றன.

45
GOLDEN TIGER spotted in Kaziranga National Park, Assam

தங்கப் புலி புகைப்படம் எடுக்கப்பட்ட காசிரங்கா தேசிய பூங்கா, 430 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஒரு பல்லுயிர் பெருக்க இடமாகும். இது உலகிலேயே அதிகமாக புலிகளைக் கொண்ட இடமாகப் புகழ்பெற்றது. அடர்த்தியான அரிய தாவரங்களும் பூங்காவில் உள்ளன. இந்திய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், எண்ணற்ற பறவை இனங்களுக்கு வசிப்பிடமாக இருப்பது இந்தப் பூங்கா. வனவிலங்கு பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய சரணாலயமாக அமைகிறது.

55
GOLDEN TIGER spotted in Kaziranga National Park, Assam

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் காசிரங்கா பூங்காவில் வழியாக குடும்பத்துடன் ஜீப் சவாரி செய்தார். அவர்களின் பயணத்தின்போது, ​​தங்கப் புலி, ராயல் பெங்கால் புலி மற்றும் இந்திய காண்டாமிருகம் போன்ற பல உயிரினங்களையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories