இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் வம்சி (23), திக்னேஷ் (21), ஹர்ஷா (21), பாலு (19), வினய் (21) என்பது தெரியவந்தது. மேலும் போதையில் இருந்ததாகவும், அதிகவேகத்தில் கார் இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கி 5 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.