Tirupati Darshan: அபிஷேக சேவை நேரத்திலும் தரிசனம் செய்யலாம்.. திருமலை திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்

Published : May 22, 2026, 05:18 PM IST

Tirupati Darshan : திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பொதுப் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மிகப்பெரிய நிம்மதி செய்தியை வெளியிட்டுள்ளது.

PREV
15
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பொதுப் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது மிகப்பெரிய குட்நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு விரைவாக தரிசனம் வழங்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக விஐபி பிரேக் தரிசனம் குறைக்கப்பட்டதன் மூலம் சாதாரண பக்தர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

25
ஸ்ரீவாரி அபிஷேக சேவை

இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீவாரி அபிஷேக சேவை நடைபெறும் நேரத்திலும் பொது பக்தர்களுக்கு தரிசனம் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அபிஷேக சேவை நேரத்தில் மட்டும் 5 ஆயிரம் சர்வ தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூடுதல் EO வெங்கையா சௌத்ரி தெரிவித்துள்ளார்.

Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சி 2026: கடன் தீர்ந்து பணமழை கொட்டப்போகும் ராசிகள் யார் தெரியுமா?

35
தரிசன நேரம் குறைப்பு

பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க திருமலையில் புதிய AI கட்டளை கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் ஒவ்வொரு மணிநேரத்திலும் வரிசை நிலை மற்றும் பக்தர்கள் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. அதன்படி தரிசன அனுமதிகள் மாற்றப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த AI தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு தரிசன நேரம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பக்தர்களின் சிரமம் குறைய இதுவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

45
திருப்பதி பக்தர்கள்

இதற்கிடையில் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் SV Goshala-வில் புதிய நெய் தயாரிப்பு மையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை மூலம் தினமும் 80 கிலோ நெய் தயாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதன் திறன் 10 ஆயிரம் லிட்டர் வரை உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டங்கள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

55
வேகமாக தரிசனம் செய்யலாம்

பொதுப் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கைகள், திருப்பதி தரிசன அனுபவத்தை மேலும் எளிமையாக்கும் என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories