புத்தாண்டில் டபுள் டமாக்கா; இன்னும் 3 மாசத்துல குவா குவா சத்தம்; கொண்டாட்டத்தில் அம்பானி ஹவுஸ்!

First Published | Nov 10, 2024, 3:49 PM IST

Anant Ambani and Radhika Merchant : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியினருக்கு 2025 பிப்ரவரியில் குழந்தை பிறக்கவுள்ளது. 

Anant Ambani Radhika Merchant

Anant Ambani and Radhika Merchant : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மற்றும் பிரபல தொழிலதிபரின் மகளான ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த ஜூலை மாதம் ரூ.5000 கோடி செலவில் திருமணம் நடைபெற்றது. உலகத்திலேயே இந்த அளவிற்கு எந்த திருமணமும் நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆனந்த் மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இருந்தது.

Anant Ambani and Radhika Merchant

இந்த திருமணத்தில் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் என்று ஏராளாமானோர் கலந்து கொண்டனர். இவ்வளவு ஏன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கான், என்று முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் டான்ஸூம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Anant Ambani and Radhika Merchant

பிரதமர் மோடியும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஜஸ்டின் பைபர், ரிஹானா, போன்ற சர்வதேச பிரபலங்கள் ஆனந்த் - ராதிகா திருமணத்தை ஆட்டம் பாட்டத்தோடு களைகட்ட வைத்தனர். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு முகேஷ் அம்பானி ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் ஒன்றை பரிசாகவும் வழங்கி ஆச்சரியப்பட வைத்தார்.

Anant Ambani and Radhika Merchant expecting thei First Child

இப்படி பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்தைத் தொடர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி வீட்டில் மழலை சத்தம் கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, முகேஷ் அம்பானி மீண்டும் ஒரு முறை தாத்தாவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆம், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிறக்கும் 2025 ஆங்கில புத்தாண்டு முகேஷ் அம்பானிக்கு இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது.

Latest Videos

click me!