உடலுறவை தவிர்த்து தள்ளிப் போடுவதால் இவ்ளோ ஆபத்துக்களா?!!

First Published | Jun 22, 2023, 3:10 PM IST

நீங்கள் ஒரு சில காரணங்களுக்காக உடலுறவு வேண்டாம் என தவிர்க்கலாம். இப்படி உங்கள் துணையுடன் உடலுறவு வைக்காமல் தள்ளி இருப்பதால் உடல் மற்றும் மன நல பிரச்சனைகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

கணவன் மனைவி இருவருக்குமே உடலுறவு மிக முக்கியமான விஷயம். என்னதான் உடல்ரீதியான இணையும் உணர்வுகள் இல்லாவிட்டாலும் ஒன்றும் பிரச்சனையில்லை என்று சிலர் காதல் வசனங்கள் பேசினாலும், இருவருமே உடலுறவு வைக்க விரும்பாவிட்டால் பிரச்சனையில்லை. இருவரில் ஒருவருக்கு விருப்பம் இருந்தாலும் உறவு சிக்கல் தான். அதுமட்டுமில்லை வெகுநாள்களாக உடலுறவு வைக்காமல் இருந்தால் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். 

பாலியல் ஆர்வம் குறையும்!  

அடிக்கடி உடலுறவு கொள்ளாமல் தள்ளி போட்டால் பாலியல் உறவு மீதிருக்கும் ஆசை குறையும். இந்த பிரச்சனை சிலருக்கு வயது மூப்பு காரணமாக வரலாம். நீங்கள் இளம்வயதில் அதிகமாக உடலுறவை தவிர்த்தால் முன்னதாகவே பாலியல் ஆசை குறைபாடு ஏற்படலாம். 

Tap to resize

குறைந்த விந்து வெளியேற்றம்: 

பிற்போக்கு விந்து (Retrograde ejaculation) என்றால் குறைந்த அளவில் விந்து வெளியேறுவதையும், சிறுநீருடன் விந்து வெளியேறுவதை குறிப்பதாகும். இந்த பிரச்சனை நீரிழிவு, உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு இருக்கும். மற்றவர்களுக்கு உடலுறவை அடிக்கடி தவிர்த்தால் வர வாய்ப்புள்ளது. விந்து முந்துதல் பிரச்சனையும் வரலாம். இதனால் உடலுறவில் ஈடுபட்டவுடன் 2 அல்லது 3 நிமிடங்களில் விந்து வெளியேறிவிடும். 

விறைப்பு குறைபாடு வந்திடும்... 

உடலுறவை தள்ளி போடுவதால் ஆண்களுக்கு விறைப்பு குறைபாடு (Erectile dysfunction) வரும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை ஆண்களின் 45 வயதுக்கு பின்னர் வரக்கூடியது. ஆனால் உடலுறவை அடிக்கடி தவிர்த்தால் முன்கூட்டியே வரும் வாய்ப்புள்ளது. 

தொற்று பாதிப்பு: 

சிறுநீரை வெளியேற்றும் பாதையில் வரும் தொற்றை சிறுநீரக பாதை தொற்று (Urinary tract infection) என்கிறார்கள். உடலுறவு கொள்வதை தொடர்ந்து தவிர்த்து விந்தணுவை அடக்கி வைப்பவர்களுக்கு இது வரக்கூடும் என ஆய்வு சொல்கிறது. உடலுறவை தவிர்க்கும் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் சதைப் பிடிப்பு, இடுப்பு வலி ஆகியவை இயல்பை விட அதிகரிக்கலாம். 

பிறப்புறுப்பு வறட்சி

பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி (Vaginal dryness) பிரச்சனையால் உட்காரும் போது, உடற்பயிற்சியின் போது, சிறுநீர் கழிக்கும் சமயம், உடலுறவின் போது பிறப்புறுப்பில் அதிக வலி உண்டாகும். உடலுறவு வைப்பதை தள்ளிப்போட்டால் இந்த பிரச்சனை மோசமாகலாம்.

Latest Videos

click me!