ஓவரா உடலுறவு வைத்தால் பெண்ணுறுப்பு தளர்ந்து போய்டுமா? அட என்னப்பா இப்படி சொல்றாங்க!!
அதிகமாக உடலுறவு வைத்து கொள்வதால் பெண்ணுறுப்பு தளர்ந்து போய்விடும் என சொல்லப்படுவது கட்டுக்கதையா? உண்மையா? முழுவிவரங்களை காணலாம்.
ஆண்கள் பெரும்பாலும் இறுக்கமான பிறப்புறுப்பு கொண்டுள்ள பெண்களை விரும்புவதாக கருதப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல, பெண்கள் அதிக முறை உடலுறவு கொள்வதால் அவர்களுடைய பிறப்புறுப்பு விரிவடைவதில்லை. குழந்தை பிறப்பு, டம்பான்கள் போன்றவையும் பிறப்புறுப்பு விரைவடைய காரணமாக உள்ளது. ஆனாலும் நிச்சயமாக இந்த மாற்றம் நிகழும் என்பதையும் சொல்லிவிட முடியாது.
பொதுவாக பெண்ணுறுப்பு இயக்கத்தின் போது மட்டுமே விரிவடையும். மற்ற நேரங்களில் இறுக்கமாக காணப்படும். ஆனால் பெண்களின் பிறப்புறுப்பு வலிமையாக இல்லை என்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். பிரசவம் அதில் முக்கியமான காரணம். மாதவிடாய், காயங்கள், கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் போன்றவை இருந்தாலும் பிறப்புறுப்பு தளர்ந்து வலுவில்லாமல் காணப்படும்.
இடுப்பு தசைகள் உடற்பயிற்சிகள்
இடுப்புத் தசை வலுவடைய மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள கெகல் பயிற்சி நல்ல பலனை தரும். பிறப்புறுப்பு தளர்வை சரி செய்ய கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்பு மாடி பயிற்சிகளை செய்யலாம். இதனால் பிறப்புறுப்பு தசைகள் வலுவடையும். உடலுறவு வைப்பதால் மட்டுமே பிறப்புறுப்பு தசைகள் தளர்வடையும் என்பது முழுக்க புனையப்பட்ட கட்டுக்கதை.
இடுப்பு தசை வலுவாக பயிற்சி
இடுப்பு தசைகள் பலவீனமாக இருந்தால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாது. இதைத் தடுக்க குப்புற படுத்தபடி, அடிவயிற்று பகுதியை சுருக்கி 5 வினாடிகள் அப்படியே வைத்து கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் ஓய்வெடுங்கள். இதை ஒரு நாளில் 5 முறை செய்தால் பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: கணவனுக்கு தெரியாம எல்லா மனைவியும் இந்த 1 விஷயத்தை ரகசியமா வச்சிக்கிட்டா ரொம்ப நல்லது... அது என்னனு தெரியுமா?