தனிமையில் இருக்க வேண்டாம்
பொதுவாக தனிமையில் இருக்கும்போதே கட்டுப்பாடு இல்லாமல் காம உணர்வுகள் எழுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் குறிப்பிட்ட சூழலை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை தனிமையாக இருக்கும் போது, ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுவது நன்மையை தரும். புத்தகங்கள் படிப்பது, படம் பார்ப்பது, போனில் நண்பர்களுடன் அல்லது துணையுடன் பேசுவது போன்ற நடவடிக்கைகள் நல்ல பலனை தரும். மேலும் காம உணர்வுகளை தூண்டும் புத்தகங்களை படிப்பது, எதிர்பாலனித்துடன் தனிமையில் இருப்பது, ஆபாசப் படங்களை பார்ப்பது போன்ற சூழ்நிலைகளையும் தவிர்த்துவிடுவது நல்லது.
மனதை கட்டுப்படுத்துங்கள்
கட்டுப்பாடில்லாமல் மனதை அலைபாய விடுவது தான் காம உணர்வுகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். அதனால் மனதை கட்டுப்படுத்தும் வழிகளை நீங்கள் கண்டறிய வேண்டும். யோகா செய்வது, தியானம் செய்வது போன்ற பயிற்சிகள் நல்ல பலனை தரக்கூடியதாகும். மனதை கட்டுப்படுத்தி யோகா மற்றும் தியானம் செய்வது போன்றவை உடல்நலனுக்கும் மனநலனுக்கும் ஆரோக்கியத்தை வழங்கும். இப்பயிற்சிகள் மனம் அமைதியாக இருப்பதற்கும் நல்ல வழியில் சிந்தனையை தூண்டவும் வழிவகை செய்கிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முந்திரி..!
கவனத்தை திசைத் திருப்புங்கள்
தனிமையாக இருக்கும் போது நம்முடைய மனம் அலைபாய்வது இயற்கை தான். அப்போதைய நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் பொறுமையுடன் கட்டுப்பாடாக இருந்தாலும், அது முடிவில் தேவையற்ற பரிசோதனைகளை மேற்கொள்ள உங்களை தள்ளும். முடிந்தவரை தனிமையாக இருக்க வேண்டாம். திருமணம் செய்யாமல் இருக்கும் வாலிபர்கள் விரைவில் துணையை தேடிக் கொள்ளுங்கள். துணையுடன் சண்டை அல்லது கருத்து வேறுபாடு கொண்டவர்கள், முடிந்தவரை சமரசம் செய்துகொண்டு வாழ பழக்கிக்கொள்ளுங்கள். நமக்கு பிரச்னை இருக்கும் நேரங்களில் தோள் சாய ஒரு தோள் இருந்தால், எதையும் கடந்து வரலாம்.
புதிய சிந்தனையை உருவாக்கிடுங்கள்
நீங்கள் தவறாகக் கருதும் எண்ணங்கள் உங்களுக்குள் இருந்தால், அந்த சிந்தனையை மடைமாற்றும் நடவடிக்கைகளை தெரிந்துவைத்திருப்பது அவசியம். தவறான மற்றும் ஆபாசமான சிந்தனைகளில் இருந்து மீண்டு வந்தவர்கள் பலருக்கும் எழுத்தும் வாசிப்பும் உறுதுணையாக புரிந்துள்ளது. அதனால் உங்களுக்கு தவறான சிந்தனைகள் தோன்றும்போது, கதை மற்றும் கவிதைகள் எழுதுவது, புத்தகங்கள் படிப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். இது உங்களுடைய காமம் சார்ந்த உணர்வுகளை கட்டுப்படுத்தி, நல்ல சிந்தனைகளை தூண்டும்.
படுக்கையறையில் உற்சாகமாக பிறக்க எளிய உணவுப் பழக்கங்கள் போதும்- முழு விபரம் இதோ..!!
இணையம் வேண்டாம், நண்பர்கள் போதும்
திருமணமாகாமல் அல்லது துணையில்லாமல் இருப்பவர்கள், எப்போதும் நண்பர்களுடன் இருப்பதை பழகிக்கொள்ளுங்கள். நமக்கு பிடித்த நபர் அருகில் இருந்தால், தேவையற்ற விஷயங்களை குறித்து நம்முடைய மனம் சிந்திக்காது. முடிந்தால் உங்களுடைய எண்ணங்களை குறித்து நெருக்கமான நண்பரிடம் கூறுங்கள். உங்கள் நலனை விரும்புபவர்கள், நிச்சயம் உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தருவார்கள். ஒருமுறை யாரிடமாவது உங்களுடைய பிரச்னையை மனம்விட்டு பேசிவிட்டால், நீங்கள் மிகவும் இலகுவாக உணர்வீர்கள். இது உங்களுடைய பிரச்னையில் இருந்து விரைவாக வெளியே வருவதற்கு உதவும்.