தூங்கும்போது கூட செக்ஸ் நினைப்பு வருதா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்குமாம் தெரியுமா!!

First Published | Jun 13, 2023, 3:20 PM IST

தூக்கத்தில் நடப்பது அல்லது பேசுவதைப் போலவே தூக்கத்தில் உடலுறவு கொள்வதும் ஒருவகை நோய் தான். சிலருக்கு பாலியல் எண்ணங்கள் இருக்கும். சிலர் சுயஇன்பம் செய்வார்கள். எல்லாமே செக்ஸ்சோம்னியா அல்லது ஸ்லீப் செக்ஸ் என்ற நோய் காரணமாக தான் நிகழ்கிறது. 

தூக்கமின்மையைப் போலவே தான் செக்ஸ்சோம்னியாவும் ஒருவகை தூக்கக் கோளாறுதான். ஆனால் பாலியல் இயல்புடையது. உங்கள் மூளை ஓரளவு இயக்கம் மற்றும் ஓரளவு தூங்கும்போது அல்லது பாராசோம்னியா நிலையில் இருக்கும்போது இது நிகழ்கிறது.  

செக்ஸ்சோம்னியா அறிகுறிகள்:  

தூக்கத்தில் துணையுடன் முன்விளையாட்டு, உடலுறவு கொள்வது, சுயஇன்பம், உடலுறவு கொள்ள முனைவது, புணர்ச்சி, தூக்கத்தில் உடலுறவின் தீவிரம் சிலருக்கு மாறுபடும். செக்ஸ்சோம்னியா பாதித்தவர்கள் சுயஇன்பம் அல்லது அதே படுக்கையில் இருக்கும் மற்ற நபருடன் கூட பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். பாலியல் கனவுகள் வரும். இந்த நோயின் தீவிரமான நிலையில் உள்ளவர்கள் பாலியல் செயலைச் செய்யும்போது வன்முறையில் கூட ஈடுபடலாம். இன்னொரு உண்மை என்னவெனில், தூக்கத்தில் நடப்பது, பேசுவது போன்றே, அந்த நபர் தாங்கள் பாலியல் இயல்புடைய எதையும் செய்வதை உணருவதில்லை அல்லது அவர்கள் நினைவில் இருப்பதில்லை. 


செக்ஸ்சோம்னியா எதனால் வரும்? 

இந்த கோளாறுக்கான மிகப்பெரிய காரணங்களில் மன அழுத்தமும் ஒன்று. தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல், அதிகப்படியான மது அருந்துதல், சிலவகை மருந்துகளை எடுத்து கொள்வது செக்ஸ்சோம்னியாவை ஏற்படுத்தலாம். 

செக்ஸ்சோம்னியா பாதிப்புகள்: 

இந்த நோயால் பாதிப்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பொதுவாக இதனால் பெரிய உடல்நல பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இந்த பாலியல் ரீதியான செயலின் காரணமாக அவமானமும், சங்கடமும் ஏற்படுகிறது. தீவிரமான நிலையில் கால் நடுக்கம், தூக்கம் தொடர்பான கால்-கை வலிப்பு, பாலியக் செயல் வன்முறையாக இருந்தால் காயங்கள், இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) அல்லது ஒற்றைத் தலைவலி ஆகியவை ஏற்படக்கூடும். 

இதையும் படிங்க: ஆண்களுக்கு திருமணமான பக்கத்து வீட்டு பெண்கள் மீது வரும் ஈர்ப்புக்கு... இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்குதா?

செக்ஸ்சோம்னியா சிகிச்சை: 

செக்ஸ்சோம்னியா பொதுவான பிரச்சனை அல்ல. இது ஒரு ஆண்டுக்கு 8 முதல் 10 பேருக்கு தான் ஏற்படுகிறது. மன அழுத்தம், பதற்றம் அதிகரிப்பதால் இந்தப் பிரச்சனை அதிகரிக்கலாம். உங்கள் மன நலனைக் கவனித்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் விரைவில் ஒரு மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரைச் சந்திப்பது செக்ஸ்சோம்னியா பாதிப்புகளை தடுக்கும். 

இதையும் படிங்க: உடலுறவுக்கு முன் இதை மட்டும் பண்ணவே கூடாது.. மீறி செய்தால் சோலி முடிஞ்து.. உஷாரா இருங்க!!

Latest Videos

click me!