ஆண்களுக்கு திருமணமான பக்கத்து வீட்டு பெண்கள் மீது வரும் ஈர்ப்புக்கு... இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்குதா?
ஆண்கள் திருமணமான பக்கத்து வீட்டு பெண்கள் மீது மையல் கொள்ள என்னென்ன காரணம் சொல்வார்கள் தெரியுமா? சுவாரசியமான தகவல்களுக்கு மேலும் படியுங்கள்.
எப்போதும் மனிதனுக்கு தன்னிடம் இருப்பதில் திருப்தியே கிடைக்காது. அடுத்தவர்கள் கையில் என்ன இருக்கிறது என்பதை தான் மனித மனம் கண்டு அலைபாயும். எல்லோருக்கும் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் பெரும்பாலானோர் இருப்பதை வைத்து இன்பம் காண்பதில்லை. அந்த விஷயத்தில் திருமணத்தை மீறிய உறவு விதிவிலக்கு இல்லை. சிலருக்கு கணவன் மனைவி உறவுக்குள் திருப்தி இருக்காது. அதனால் இன்னொருவர் மீது ஈர்ப்பு வரும். சிலரின் உறவில் எல்லாமே இருந்தாலும் மற்றொருவர் மீது ஈர்ப்பு ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில் திருமணமான பக்கத்து வீட்டு பெண்கள் மேல் ஈர்ப்பு கொண்டுள்ள ஆண்களின் அனுபவ பகிர்வை இங்கு காணலாம்.
"என் பக்கத்து வீட்டு பெண் திருமணமானவர். இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னை விட சற்று பெரியவள். அவளை எனது குழந்தை பருவத்திலிருந்தே தெரியும். மிகவும் அழகானவள். அவளுக்கே தெரியாமல் ரசிப்பேன். அவள் எப்போதும் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசி. இத்தனை ஆண்டுகளில் அவளுக்கு வயதாகவில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்னும் அழகாக இருக்கிறாள். அந்த அழகால் நான் ஈர்க்கப்படுகிறேன். நாங்கள் பேசும் போதெல்லாம் முறையாக பேசுவோம். எனக்கு வேறு எதிலும் ஆர்வம் இல்லை. அந்த அழகை காண வேண்டும் அவ்வளவு தான்" என்றிருக்கிறார் ஒரு இளைஞர். திருமணமான பெண் என்று தெரிந்தாலும் அழகை ரசிக்கமுடியாமல் இருக்கமுடியவில்லை போல..
"என் பக்கத்து வீட்டு பெண் பார்க்கவே மிகவும் அழகாக இருப்பார். அவருடைய கவர்ச்சியான தேகம் எனக்கு காதலை தூண்டுகிறது. அப்படியே அந்த காதலில் இறந்தாலும் தகும். இது என் பக்கத்து வீட்டாரின் காரையோ அல்லது வீட்டையோ ரசிப்பதை போன்றது. உலகின் மற்றொரு அற்புதம். நான் அவ்வப்போது அவளைப் பற்றி கற்பனையில் இருப்பேன். ஒருபோதும் அப்படி நடக்காது.. அல்லது அதற்கு மேல் ஒன்றுமில்லை. அவள் திருமணமாகி மகிழ்ச்சியாக இருக்கிறாள். நானும் அப்படித்தான். நாங்கள் நல்ல பக்கத்து வீட்டாராக வாழ்கிறோம். அதுவே போதுமானது. உங்களின் எல்லை குறித்த தெளிவும் நல்ல மனதும் இருப்பதால் நீங்கள் இந்த வழியில் வாழ்க்கையை தொடரலாம்" என்றார் மற்றொருவர்.
எதிர்பாராத முத்தமும் ஓர் இரவும்...
தன் வாழ்வில் நடந்ததை அப்படி ஒரு ஆண் சொன்னால் அதில் காமத்தின் (sex) நெடியா, நினைவில் வலியா எது மிஞ்சும்?
"எனக்கு 26 வயது இருக்கும்போது என் பக்கத்து வீட்டு பெண் குறித்து அடிக்கடி கற்பனை செய்வேன். அவளுக்கு 36 வயது. என் அம்மா வீட்டுக்கு அருகே அவள் வீடு இருந்தது. அன்றொரு நாளில் எங்களுடைய அண்டை வீட்டுக்காரர்களில் ஒருவர் தங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் விருந்து வைத்தார். அழைப்பை ஏற்று நானும் என் அம்மாவுடன் சென்றேன். அங்கு என் கற்பனையில் இருக்கும் பெண்ணும் வந்தார்.
இதையும் படிங்க: கணவன் மனைவி இந்த 3 விஷயங்களை பண்ணிட்டா போதும்.. கடவுளே வந்தாலும் அவங்கள பிரிக்க முடியாது!!
அவராக என்னிடம் வந்து பேசினார். “ஹூம்ம் ஒரு மாதிரியாக இருக்கிறாய், உனக்கு காதலி இருக்கிறாளா?" நான் அமைதியாக தலையாட்டினேன். அனைவரும் போக்கர் விளையாடும் போது அவள் என் முகத்தைப் பார்த்தாள். இப்போதும் அந்த பார்வை நினைவிருக்கிறது. அவள் தன்னுடைய சாவியை வெளியே இருந்த புதரில் தவறவிட்டதாக என்னை அழைத்தாள். அதைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டாள். நாங்கள் இருவருமாக வெளியே சென்றபோது, அவளின் முகம் எனக்கு எதிரே நெருக்கமாக இருந்தது. மெல்லிய புன்னகை. நான் முத்தத்திற்காக நெருங்கினேன்.
அந்த இரவு நாங்கள் அவளுடைய வீட்டில் இருந்தோம். இரவு முழுவதும் அவளுடைய வீட்டிலேயே கழித்தேன். அது நம்பமுடியாத அனுபவம். மீண்டும் நாங்கள் சந்தித்து கொள்ளவில்லை. ஆனால் என் கற்பனைக் நிறைவேறியது. ஒருபுறம் மனம் மகிழ்ந்தாலும், அந்த கணம் மீண்டும் வராமலே போனது கொஞ்சம் வருத்தம் தான். என் வாழ்நாள் முழுவதும் அன்புடன் அந்த இரவை நினைவில் கொள்வேன்"என்றார் உருக்கமாக.
கண்ணுக்கு குளிர்ச்சியான அழகு, ரசனை, பாலியல் கற்பனை போன்றவை தான் அடிப்படையாக பக்கத்து வீட்டு பெண்களிடம் ஆண்களை ஈர்க்க செய்கிறது.
இதையும் படிங்க: பெண்களுடைய மாதவிடாய் காலத்தில் உடலுறவு... அப்ப ஆண்களுக்கு அந்த இடத்துல பாதிப்பு வருமா?