பெண்களுடைய மாதவிடாய் காலத்தில் உடலுறவு... அப்ப ஆண்களுக்கு அந்த இடத்துல பாதிப்பு வருமா?
பெண்களுடைய மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்து கொள்வதால் ஆண்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுமா? உண்மை என்ன? வாங்க பார்க்கலாம்.
கணவன் மனைவிக்குள் காமம் சரியாக இருந்தால் தான் அவர்களின் இல்லற வாழ்வில் நல்ல நெருக்கம் ஏற்படும். வெறும் காமம் மட்டுமல்ல அன்பு, அக்கறை போன்ற விஷயங்களும் தாம்பத்தியத்தில் முக்கியமானது தான். சில கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாக இருக்கும். அவர்களால் ஒருநாள் கூட விலகி இருக்கமுடியாது. அதனால் மனைவியின் மாதவிடாய் காலங்களில் கூட கூடிவிடுவார்கள். ஆனால் இதனால் உடல் நலம் பாதிக்கப்படும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? என்பதை இங்கு காண்போம்.
உடலுறவு குறித்த சில கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்கள் ஆண்களை தொட்டு தழுவினாலோ, உடலுறவில் ஈடுபட்டாலோ அந்த ஆணுக்கு உடல்நல பாதிப்பு வரும் என்பது பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அப்படியல்ல, மாதவிடாய் சமயத்தில் உடலுறவு கொள்வது அவரவர் விருப்பமே. உறவு கொள்ளும் இருவருக்கும் எந்த விதமான பிரச்னையும் இல்லாதபட்சத்தில் தாரளமாக உறவு கொள்ளலாம்.
ஆண்களுக்கு மட்டுமே உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பது முற்றிலும் பொய். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்தால் ஆண் பெண் இருவருடைய உடல் திரவங்களும் கலந்துவிட வாய்ப்புள்ளதால் இருவருக்குமே பால்வினை நோய்கள் வர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: செக்ஸ் வைத்து கொள்ளும்போது பெண்களுக்கு வலி வருவது இயல்பா? அதனால ஆபத்து வருமா?
குறிப்பாக ஆண்கள் ஆணுறை மாதிரியான தடுப்பு முறையை பின்பற்றுவது நல்லது. மாதவிடாய் காலத்தில் உறவு வைத்து கொண்டால் கருவுற முடியவே முடியாது என்பதும் பொய்யான நம்பிக்கை. பயப்படாமல் இருங்கள்.
இதையும் படிங்க: உங்க மனைவிக்கு கள்ள உறவு இருப்பதைக் காட்டி கொடுக்கும் 9 அறிகுறிகள்!!