ஆண்களே! ப்ளீஸ் நோட் பண்ணிக்கோங்க...உடலுறவின் போது இரண்டு ஆணுறை யூஸ் பண்ணா என்ன நடக்கும் தெரியுமா?

First Published | Oct 4, 2023, 9:00 PM IST

பல தம்பதிகள் கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடைகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆணுறைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பலருக்கு அவற்றின் பயன்பாடு குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. அதுகுறித்து இங்கு பார்க்கலாம்..
 

ஆணுறை பயன்படுத்துவது நல்லதா?
மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி.. ஆணுறை பயன்பாடு மிகவும் நல்லது. ஏனெனில் இது பல நோய்த்தொற்றுகள் மற்றும் பிற பால்வினை நோய்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கிறது. அவை எல்லா வகையான கருத்தடை முறைகளையும் விட சிறந்தவை. ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பால்வினை நோய்கள் பரவுவதைக் குறைக்கலாம். மேலும் தேவையற்ற கர்ப்பத்தின் வாய்ப்புகளை குறைக்க ஆணுறைகள் பெரிதும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை.

இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா?
கருத்தடைகளைப் பயன்படுத்தும் போது எந்தவொரு சிக்கல்களையும் தவிர்க்க எல்லோரும் விரும்புகிறார்கள். அதனால்தான் சிலர் ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக இதை செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அவற்றுக்கிடையே அதிக அழுத்தம் மற்றும் உராய்வு ஏற்படும். இதனால் அவை கிழிந்துவிடும். எனவே அவற்றைப் பயன்படுத்த முடியாது. 

இதையும் படிங்க: உடலுறவுக்கு பின் ஆண்களே இதை செய்ய மறக்காதீங்க..பின் நடக்கும் மாயத்தை நீங்களே பாப்பீங்க..!!

Tap to resize

ஆணுறை பயன்படுத்துவதால் பாலியல் தூண்டுதல் குறையுமா?
பலர் பல ஆண்டுகளாக ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு இதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஆணுறைகளின் அதிகப்படியான பயன்பாடு பாலியல் ஆசைகள் மற்றும் பாலியல் உணர்வுகளை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. 

இதையும் படிங்க:  பல நாட்கள் செக்ஸ் வைக்கவில்லை? ஜாக்கிரதையாக இருங்க...'இந்த' பிரச்சனைகளை சந்திப்பீங்க..!!

இருப்பினும், 2007 இல் இந்தியானா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆணுறைகளைப் பயன்படுத்துவது பாலியல் இன்பத்தையும் உணர்ச்சிகளையும் குறைக்காது என்று கண்டறியப்பட்டது. ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் பரவும் நோய்களைத் தடுக்க மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை இந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!