உடலுறவுக்கு பின் ஆண்களே இதை செய்ய மறக்காதீங்க..பின் நடக்கும் மாயத்தை நீங்களே பாப்பீங்க..!!
தம்பதிகளுக்கு உடலுறவு ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. இது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இருப்பினும், அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க, ஆண்கள் சில தவறுகளை செய்யக்கூடாது..
![article_image1](https://static-gi.asianetnews.com/images/01h8kmt8bzxd405qg5nke1rvze/relationship-stages_380x217xt.jpg)
பொதுவாகவே, பல உடலுறவுக்கு பின் ஆண்கள் உடனே தூங்குவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. அவர்கள் தூங்க விரும்புவதில்லை. எனவே, அதற்குப் பிறகு பெண்களைக் கவரும் சில விஷயங்களை ஆண்கள் செய்ய வேண்டும். அது அவர்களுக்குள் உங்கள் மீது இன்னும் ஈர்ப்பை அதிகரிக்க செய்யும் தெரியுமா? அது..
![article_image2](https://static-gi.asianetnews.com/images/01h552xmw8rkpn90sj4rwqx01e/relationship-sex-life-1689166730120_380x214xt.jpg)
இசை கேட்பது: இந்த நேரத்தில், தம்பதிகள் இருவரும் நல்ல மனநிலையில் இருப்பார்கள். அப்போது நல்ல இசை அவர்களின் மனநிலையை அதிகரிக்கும். இதனால் இருவரும் மனதளவில் மகிழ்ச்சி அடைவார்கள். எனவே, உடலுறவுக்கு பிறகு இசையைக் கேட்பது உடலையும் மனதையும் சோர்வடையாமல் வைத்திருப்பது மட்டுமல்லாமல் ஒருவரையொருவர் ஈர்க்கிறது.
மசாஜ்: உடலுறவுக்கு பின் செய்ய ல்க் கூடிய பணிகளில் இது மிகவும் முக்கியமான பணியாகும். அந்த நேரத்திற்கு பிறகு இவ்வாறு செய்தால் அவர்கள் நிம்மதியாக உணர்வார்கள். எனவே, ஆண்களே கண்டிப்பாகச் இதை செய்ய மறக்காதீர்கள்.
இதையும் படிங்க: ஆண்களே ப்ளீஸ் நோட்.. உங்கள் காதலியிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் இவைதான்..
பாராட்டுவது: நீங்கள் கவனித்திருக்கலாம், நாம் ஒரு செயலைச் செய்யும்போது யாராவது வந்து நம்மைப் பாராட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும். உடலுறவுக்கும் இது பொருந்தும் தெரியுமா? ஆம்..நீங்கள் உடலுறவுக்கு பின் உங்கள் மனைவியைப் பாராட்டுங்கள். அப்போது நடக்கும் மாயத்தை நீங்கள் காண்பீர்கள்.
ஆடைகளை சரிசெய்தல்: உடலுறவுக்கு பிறகு அவர்களுக்கு ஆடைகளை சரிசெய்ய உதவுங்கள். இது உங்களை அவர்களின் மனதில் எங்கோ வைத்திருக்கும். இதற்கு, அவளது அனுமதி பெறாமலேயே நீங்கள் முன்முயற்சி எடுக்கலாம்.
இதையும் படிங்க: இந்த மாற்றங்களை செய்தால்.. செக்ஸ் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்.. ஆண்களே கட்டாயம் படிங்க..
பேசுவது: உடலுறவுக்கு பிறகு இது மிக மிக முக்கியமானது. ஆண்கள் பலர் உடலுறவுக்கு பின் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று
வெளியேறுகிறார்கள். ஆனால், அப்படிச் செய்யாதீர்கள். சிறிது நேரம் அரட்டை அடிக்கவும் அல்லது மனம் திறந்து பேசுங்கள். இருவரது விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது இருவருக்கும் இடையே மகிழ்ச்சியான நேரத்தை உருவாக்குகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D