ஒருவர் பிறக்கும்போது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் வளரிளம் பருவத்தில் அவருடைய பாலினம் மாறுபட வாய்புள்ளது. அதை போல பாலீர்ப்பும் (sexuality) மாறுபட வாய்ப்புள்ளது. ஆணும் பெண்ணும் காதல் கொள்வதையே வரலாறுகள் நமக்கு காட்டி வந்த நிலையில் இப்போது வெவ்வேறு பாலீர்ப்பு வகைகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. LGBT சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த காலக்கட்டத்தில் தான் தங்களை வெளிப்படையாக அறிவித்து கொள்கிறார்கள்.
தன்பால் ஈர்ப்பு மனநோயா?
இது மனநோய் இல்லை. ஒருவருடைய பாலுணர்வு பிறப்புடன் தொடர்புடையது என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு ஆண் ஆண் மீதும், பெண் பெண் மீதும் கொள்ளும் காதல் அவர்களுக்குள் இயல்பாக தோன்றுகிறது.
மனநலக் கோளாறு
கடந்த 1973 ஆம் ஆண்டில், அமெரிக்க மனநல சங்கம், தன்பால் ஈர்ப்பு அல்லது ஓரினச்சேர்க்கையை மனநலக் கோளாறுகள் பட்டியலில் இருந்து நீக்கியது.
மருத்துவசிகிச்சை
சிலர் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு மனநல சிகிச்சை அளித்து மாற்றிவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. தன்பால் ஈர்ப்புக்கு பரிந்துரை செய்யப்பட்ட சிகிச்சை என்று ஏதும் இல்லை.
இதையும் படிங்க: டாக்சிக் உறவின் 9 அறிகுறிகள்!!
கட்டாய திருமணம்
தன்பால் ஈர்ப்பாளர்கள் பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். சில பெற்றோர் திருமணம், தங்கள் பிள்ளைகளின் பாலுணர்வை மாற்றும் என நினைக்கின்றனர். சிலர் நகர்ப்புற வாழ்க்கை முறைகளால் தான் பிள்ளைகள் ஓரின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். ஆனால் தன்பால் ஈர்ப்பாளர்கள் என்பது கிராமப்புற அல்லது நகர்ப்புற வாழ்க்கைமுறையின் தாக்கம் அல்ல. அது ஹார்மோன்கள் உண்டாக்கும் உடல்நிலை மாற்றம். இதை கட்டாய திருமணமோ, மனநல சிகிச்சையோ மாற்றாது என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க: திருமணமான பெண்கள் மற்ற ஆண்களை காதலித்தால்.. இந்த காரியங்களை கூச்சமே இல்லாமல் செய்வார்கள்..