காம உணர்வுகள் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதே. ஆனால் பெரும்பாலான ஆண்கள் பெண்களுடைய பாலியல் ஆசைகள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. பல தம்பதிகளுக்குள் பாலியல் விஷயங்களில் வெளிப்படத் தன்மை இல்லை.
இரவில் அவசரமாக உறவு கொள்ளும் இந்திய தம்பதிகள் இன்றும் இருக்கிறார்கள். காமத்தை ரசிக்காத ஆண்களால், பெண்களை புரிந்து கொள்ளவும் முடியாது. பாலியல் விஷயங்களில் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை இங்கு காணலாம்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சுயஇன்பம் மீது மோகம் இருக்கும். ஒவ்வொரு பெண்களும் உடலுறவு விஷயத்தில் வெவ்வேறு விருப்பங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் வெவ்வேறு பொசிஷன்கள் முயன்று பார்க்க விரும்புகிறார்கள். சிலருக்கு வெகு நேரம் உடலை தொட்டு இன்பம் காண வேண்டும் என்பது விருப்பமாக இருக்கிறது.
பெரும்பாலான பெண்கள் தன்னுடைய துணை "தான் சொல்வதை கேட்க வேண்டும்" என ஆசைப்படுகிறார்கள். படுக்கையில் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உறவு கொள்ளும்போது பெண்கள் வலியால் துடித்தால், அந்த சமயத்தில் ஆண்கள் சற்று பொறுமையுடனும் தங்களுடைய மனைவியின் உடல் மீது அக்கறையுடனும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உங்களுடைய துணையிடம் அவர்களுடைய பாலியல் விருப்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உறவு கொள்ளும் கணவராக நீங்கள் மாறிவிட்டால் உங்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: ஓவரா உடலுறவு வைத்தால் பெண்ணுறுப்பு தளர்ந்து போய்டுமா? அட என்னப்பா இப்படி சொல்றாங்க!!