Vijay movies without Audio Launch
கோட்
நடிகர் விஜய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவு எதிர்பார்ப்பு அப்படங்களின் ஆடியோ லாஞ்ச்சுக்கும் இருக்கும். அதில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரிக்கென தனி ஃபேன் பேஸ் உண்டு. அப்படி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யின் மாஸ் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ஆடியோ லாஞ்சே நடத்தாமல் கோட் படத்தை ரிலீஸ் செய்ய உள்ள தகவல் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. லியோ பாணியில் ஆடியோ லாஞ்ச் நடத்தாமல் வெற்றிவிழாவை சிறப்பாக கொண்டாடும் திட்டத்தில் உள்ளாராம் தளபதி. கோட் படத்திற்கு முன் ஆடியோ லாஞ்ச் நடக்காமல் ரிலீஸ் ஆன விஜய் படங்கள் பற்றி பார்க்கலாம்.
Leo Movie
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்தாண்டு ரிலீஸ் ஆனது. விஜய்யின் கெரியரில் அதிக வசூலை வாரிக்குவித்த படமும் இதுதான். இப்படத்தின் ஆடியோ லாஞ்சை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு கடைசி நேரத்தில் கேன்சல் செய்தனர். ஏனெனில் போலி பாஸ்கள் விநியோகம் செய்யப்பட்டதால் வேறுவழியின்றி ஆடியோ லாஞ்சை ரத்து செய்தனர். அதற்கு பதில் அப்படத்தின் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்தியது லியோ படக்குழு.
இதையும் படியுங்கள்... ரஜினி இல்ல... அம்மா, மகள் இருவருடனும் ஜோடியாக நடித்த ஒரே ஹீரோ யார் தெரியுமா?
Beast Movie
பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் பீஸ்ட். கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கும் ஆடியோ லாஞ்ச் நடத்தப்படவில்லை. அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகம் இருந்த காரணத்தால் ஆடியோ லாஞ்ச் நடத்தவில்லை. அதற்கு பதிலாக விஜய்யை இயக்குனர் நெல்சன் நேர்காணல் செய்தார். அந்த பேட்டியை படத்தின் புரமோஷனுக்காக பயன்படுத்தியது படக்குழு.
Bairavaa
பைரவா
ஆடியோ லாஞ்சே நடக்காமல் ரிலீஸ் ஆன விஜய்யின் மற்றொரு திரைப்படம் பைரவா. இது கடந்த 2017-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படத்தின் ஆடியோ லாஞ்சை 2016-ம் ஆண்டு டிசம்பரில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அந்த ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்ததால், ஆடியோ லாஞ்ச் நடத்தும் திட்டத்தை பைரவா படக்குழு கைவிட்டது.
இதையும் படியுங்கள்... கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் பிரபல நடிகையை திரைப்படத்தில் இருந்து வெளியேற்றிய எம்ஜிஆர்!