தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் பூண்டு விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெண்டைக்காய் விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை ஆகிறது
Special Train : கோவை, நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு தொடங்கியதா.?