பாக்ஸ் ஆபிஸில் டம்மி பீஸ் ஆகிப்போன கீர்த்தி சுரேஷின் "ரகு தாத்தா" - முதல் நாள் வசூல் நிலவரம் இதோ!

First Published | Aug 16, 2024, 6:02 PM IST

Raghu Thatha Collection : நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி கோலிவுட் உலகில் மூன்று முக்கிய திரைப்படங்கள் வெளியானது. அதில் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

August 15 releases

நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல நடிகர் விக்ரமின் தங்கலான் திரைப்படமும், இளம் நடிகர் அருள்நிதியின் "டிமான்டி காலனி 2"படமும், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் "ரகு தாத்தா" திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது.

வளச்சு வளச்சு 25 முறை நேருக்கு நேர் மோதிய விஜயகாந்த், ராமராஜன் - இறுதியில் யாருக்கு வெற்றி?

Keerthy Suresh

இதில் கீர்த்தி சுரேஷின் "ரகு தாத்தா" திரைப்படத்தை பிரபல Hombale Films நிறுவனம் தயாரித்த நிலையில் அதில் முன்னணி கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நேர்த்தியான தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

Tap to resize

Actress Keerthy Suresh

ஹிந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி உலக அளவில் வெளியானது. கடந்த சில வாரங்களாகவே இந்த திரைப்படத்திற்கான தீவிரமான பிரமோஷன் பணிகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh Raghu Thatha

இந்நிலையில் நேற்று வெளியான மூன்று திரைப்படங்களில் தங்கலான் திரைப்படம் 12 கோடியும், அருள்நிதியின் "டிமான்டி காலனி 2" 3.5 கோடியும் வசூல் செய்த நிலையில், கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா திரைப்படம் 25 லட்சம் ரூபாய் மட்டுமே முதல் நாளில் வசூல் செய்துள்ளது. 

பாரதி ராஜாவின் முதல் பட ஹீரோயின் ஜெயலலிதாவா? டேக் ஆஃப் ஆகாமல் போன ஹிட் படம்!

Latest Videos

click me!