வளச்சு வளச்சு 25 முறை நேருக்கு நேர் மோதிய விஜயகாந்த், ராமராஜன் - இறுதியில் யாருக்கு வெற்றி?
Vijayakanth Vs Ramarajan : தமிழ் திரையுலகை பொருத்தவரை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இணையான புகழோடு வலம் வந்த நடிகர்கள் தான் விஜயகாந்த் மாற்று ராமராஜன்.
Vijayakanth
இவர்கள் இவருடைய திரைப்படங்கள் சுமார் 25 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. தற்பொழுது அந்த போட்டியில் ஜெயித்தது யார் என்று குறிப்பது பார்க்கலாம். கடந்த 1986ம் ஆண்டு ராமராஜனின் "நம்ம ஊரு நல்ல ஊரு" என்கின்ற திரைப்படமும், அதே நாளில் விஜயகாந்தின் "தர்ம தேவதை" மற்றும் "தழுவாத கைகள்" என்கின்ற 2 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. உண்மையை சொல்லப்போனால் இந்த போட்டியில் வென்றது மூன்று திரைப்படங்களும் தான்.
பாரதி ராஜாவின் முதல் பட ஹீரோயின் ஜெயலலிதாவா? டேக் ஆஃப் ஆகாமல் போன ஹிட் படம்!
Actor Ramarajan
அதனைத் தொடர்ந்து கடந்த 1987ம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியான ராமராஜனின் திரைப்படம் தான் "எங்க ஊரு பாட்டுக்காரன்". அதேபோல விஜயகாந்தின் "வீரபாண்டியன்" திரைப்படமும் அதே நாளில் வெளியானது. வசூல் ரீதியாக பார்க்கும் பொழுது இந்த இரு திரைப்படங்களில் "வீரபாண்டியன்" படத்தை விட "எங்க ஒரு பாட்டுக்காரன்" ஒரு படி மேலிருந்தது என்றே கூறலாம்.
Kollywood Heroes
1987ம் ஆண்டு இரண்டாம் பாதியில் விஜயகாந்தின் "நினைவே ஒரு சங்கீதம்" என்கின்ற திரைப்படமும் ராமராஜனுக்கு "ஒன்று எங்கள் ஜாதியே" என்கின்ற திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக, விஜயகாந்தின் "நினைவே ஒரு சங்கீதம்" மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், ஒன்று எங்கள் ஜாதியே திரைப்படம் குறைவான வசூலையே பெற்றது.
Captain Vijayakanth
அதேபோல 1988 ஆம் ஆண்டு ராமராஜனின் "சென்பகமே செண்பகமே" திரைப்படமும் விஜயகாந்தின் "காலையும் நீயே மாலையும் நீயே" மற்றும் "மக்கள் ஆணையிட்டால்" என்ற திரைப்படம் வெளியானது. இதில் ராமராஜன் படமே வெற்றி பெற்றது. அதேபோல 1989ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ராமராஜனுக்கு "கரகாட்டக்காரன்" திரைப்படமும் விஜயகாந்துக்கு "பொறுத்தது போதும்" என்கின்ற படமும் வெளியானது.
Veteran Actor Ramarajan
அந்த போட்டியிலும் மெகா ஹிட் வெற்றிபெற்றது ராமராஜன் தான். 1989 ஆம் ஆண்டு விஜயகாந்தின் "பொன்மனச் செல்வன்" திரைப்படமும், ராமராஜனுக்கு "ராஜா ராஜா தான்" என்கின்ற படமும் வெளியானது. இதில் விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் திரைப்படம் தான் சூப்பர் ஹிட் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Actor Captain Vijayakanth
கிட்டத்தட்ட 1999ம் ஆண்டு வரை இந்த இரு நடிகர்களுடைய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டிபோட்டு வந்தது. அதன்படி 1999ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் "பெரியண்ணா" திரைப்படமும், ராமராஜனின் "பூ மனமே வா" படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. அந்த போட்டியில் விஜயகாந்தின் பெரியண்ணா படமே வெற்றிபெற்றது.
மேலும் இந்த 13 ஆண்டுகால போட்டியில் சரிக்கு சமமான வெற்றியை பெற்று விஜயகாந்த் மற்றும் ராமராஜன் ஆகிய இருவருமே வெற்றி பெற்றார்கள் என்று தான் கூறவேண்டும்.
வரலட்சுமி விரதம்.. கிளாசிக் உடையில் சும்மா மின்மினி போல மின்னிய நாயகிகள் ரஷிதா & விஜயலக்ஷ்மி!