தமிழர்களை கொச்சைப்படுத்திய தன்யாவால் லால் சலாம் படத்துக்கு வந்த சிக்கல்... கமிஷனர் அலுவலகத்திற்கு பறந்த புகார்

First Published | Feb 2, 2024, 11:24 AM IST

லால் சலாம் படத்தின் நாயகி தன்யா உள்பட நான்கு பேர் மீது சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் புகார் அளித்துள்ளார்.

Lal Salaam heroine Dhanya Balakrishna

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.

Lal Salaam Movie Team

லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதால், அதிகளவிலான திரையரங்குகளில் லால் சலாம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது லால் சலாம் படத்துக்கு புது சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறியவருக்கு ஹீரோயின் வாய்ப்பு - ரஜினி மகளை வெளுத்துவாங்கிய பிரபலம்

Latest Videos


Rajinikanth

லால் சலாம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணன், சில ஆண்டுகளுக்கு முன் போட்ட எக்ஸ் தள பதிவில், அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீர் பிச்சை கேட்டீர்கள் கொடுக்கிறோம், மின்சாரம் கேட்டீர்கள் கொடுக்கிறோம், உங்கள் மக்கள் வந்து எங்கள் அழகான பெங்களூரு நகரத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் அதையும் அனுமதித்தோம். இப்படி கெஞ்சிக்கொண்டே இருக்கிறாய் நாங்களும் கொடுக்கிறோம். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா என குறிப்பிட்டு தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார்.

Lal Salaam Movie Case

அவரின் இந்த பதிவு தற்போது மீண்டும் பூதாகரமாகி உள்ள நிலையில், தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தன்யா பேசியதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் இப்படத்திற்கு தடைவிதிக்க கோரியும், லால் சலாம் கதாநாயகி தன்யா, நடிகர் ரஜினி மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். இதனால் லால் சலாம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... லால் சலாமுக்கு முன்னர் இத்தனை திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினி? வியக்க வைக்கும் லிஸ்ட் இதோ

click me!