- Home
- Gallery
- லால் சலாமுக்கு முன்னர் இத்தனை திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினி? வியக்க வைக்கும் லிஸ்ட் இதோ
லால் சலாமுக்கு முன்னர் இத்தனை திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினி? வியக்க வைக்கும் லிஸ்ட் இதோ
லால் சலாம் படத்துக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வெளிவந்த தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கோலிவுட்டில் தற்போது செம்ம பிசியான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 72 வயதிலும் கைவசம் மூன்று படங்களோடு டாப் ஸ்பீடில் சென்றுகொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இதில் ரஜினி உடன் அமிதாப் பச்சன், பகத் பாசி, ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் ஷூட்டிங் முடிந்ததும் வருகிற ஏப்ரல் மாதம் லோகேஷ் பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார் ரஜினி. மறுபுறம் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளையும் முழுவீச்சில் செய்து வருகிறார் நெல்சன்.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா என்னுடைய 2-வது தாய்... தன்னுடைய சிங்கப்பெண்கள் பற்றி பேசி கண்கலங்கிய ரஜினிகாந்த்
இவை எல்லாம் ரஜினி ஹீரோவாக நடிக்கும் படங்கள். இதுதவிர அவர் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் ஒன்றும் ரிலீசுக்காக காத்திருக்கிறது. அப்படம் தான் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 9-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதை போல் இதற்கு முன்னர் என்னென்ன படங்களில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம். அதன் லிஸ்ட் இதோ
பாவத்தின் சம்பளம் (1978)
தாயில்லாமல் நான் இல்லை (1979)
நட்சத்திரம் (1980)
நன்றி மீண்டும் வருக (1982)
அக்னி சாட்சி (1982)
உருவங்கள் மாறலாம் (1983)
யார் (1985)
கோடை மழை (1986)
மனதில் உறுதி வேண்டும் (1987)
பெரிய இடத்து பிள்ளை (1990)
குசேலன் (2008)
லால் சலாம் (2024)
இதையும் படியுங்கள்... "அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோவம் வரும்".. லால் சலாம் ஆடியோ லாஞ்சு - உணர்ச்சிவசமாக பேசிய ஐஸ்வர்யா!