Khushbu: என் பலம்... என் வீக்னஸ்... என் உலகம் இது தான்! குஷ்பூ வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

நடிகை குஷ்பூ தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு போட்டுள்ள பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.
 

1980களில் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி மொழியில் அறிமுகமான நடிகை குஷ்பூ, தன்னுடைய 14 வயதிலேயே ஹீரோயினாகவும் மாறினார். குறிப்பாக தமிழில் 1989ஆம் ஆண்டு, வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருஷம் 16 என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Kushboo Sundar

முதல் படத்திலேயே தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட இவர், அடுத்தடுத்து ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழை தாண்டி, ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, போன்ற மொழி படங்களிலும் நடித்தார்.

உள்ளே வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன வைல்ட் கார்டு போட்டியாளர்! யார் தெரியுமா ?
 


இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், குஷ்பூ முறைமாமன் படத்தில் நடித்தபோது, குஷ்பூ - சுந்தர் சி இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களின் காதலின் அடையாளமாக இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தது.

தற்போது இவர்களின் பிள்ளைகள் இருவருமே, படிப்பை முடித்துவிட்டு சினிமா துறையில் கால்பதிக்க தயாராகியுள்ளனர். குஷ்பூ-வின் மூத்தமகள் அவந்திகா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இளையமகள் அனந்திடா கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள 234 படத்தில் துணை இயக்குனராக பணியாற்ற உள்ளார்.

இதுக்கு சேலை கட்டாமல் போஸ் கொடுத்திருக்கலாம்! கொசுவலை போன்ற புடவையில்.. திகட்டாத கவர்ச்சி காட்டும் லாஸ்லியா!

இந்நிலையில் தற்போது தன்னுடைய  கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, என்னுடைய பலம், என்னுடைய பலவீனம், என்னுடைய உலகம் இவர்கள் தான் என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!