தீபாவளி என்றால், குழந்தைகளுக்கு எப்படி, பட்டாசு... புத்தாடை இஷ்டமே அதே போல் வீட்டில் தீபாவளி பலகாரங்களை சுவைத்தபடி, பிடித்த நடிகர்களின் படத்தை பார்ப்பது சில ரசிகர்களுக்கு இஷ்டம். அப்படி இந்த வருடம் பல முன்னணி நடிகர்களின் படங்கள் தொலைக்காட்சியில் வெளியானது. சன் டிவியில் தளபதி விஜய், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் திரைப்படம் வெளியானது.
don movie
அதே போல் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரா பிகில், தெறி, ஜில்லா போன்ற படங்களும் வெளியாகி தளபதி ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைத்தது. கலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியாகி, 100 கோடி கிளப்பில் இணைந்த 'டான்' திரைப்படம் படம் ஒளிபரப்பானது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படத்தில், டாக்டர் படத்தை தொடர்ந்து, பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்திருந்தார்.
பட்டு சேலையில் சன்னி லியோன்! ஜி.பி.முத்துவுடன் மேடையில் செம்ம அரட்டை! 'ஓ மை கோஸ்ட்' ஆடியோ லான்ச் போட்டோஸ்.!
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய 'விக்ரம்' திரைப்படம் விஜய் டிவியில் வெளியானது. ஜீ தொலைக்காட்சியில் 1000 கோடி வசூல் செய்த கே.ஜி.எப் திரைப்படம் மற்றும் சிம்புவின் 'மாநாடு' போன்ற படங்கள் வெளியானது.
தற்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படங்களில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் பற்றிய தகவல் வெளியாய்க்கியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான, தளபதி விஜய்யின் பீஸ்ட் - 12.62 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் வெளியான விக்ரம் - 4.42 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சியில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் - 3.63 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் 80-வது மணி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு!