நடிகைகளுக்கு இணையாக சூப்பர் டூப்பர் போஸ்..! கலக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி...! ஒரு வேலை இதுக்கு தானோ..? சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த, பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இனிமையான குரலால் பல ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதை தொடர்ந்து, தற்போது பல தமிழ் படங்களில் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார். பாடகியாக இருப்பது ஒரு புறம் இருக்க, அவ்வப்போது விதவிதமாக ஆடைகளுடன் கலக்கல் போஸ் கொடுத்து வருகிறார். ஏற்கனவே இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை தேடுகிறாரோ என்கிற சந்தேகமும் எழுகிறது. பிரகதியின் சூப்பர் போட்டோஸ் இதோ...