Bigg boss shakshi agarwal
தமிழில் ஒளிபரப்பாகி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நாயகிகள் பலர் உண்டு. அதில் முன் வரிசையில் இருப்பவர் தான் சாக்ஷி அகர்வால்.
Sakshi Agarwal
பிக் பாஸில் இருந்து வெளிவந்த பின்னர் சுமார் நான்கு படங்களில் நடித்த இவர் சிண்ட்ரெல்லா படத்திற்காக வெகுவாக பாராட்டுகளை பெற்றிருந்தார். தொடர்ந்து 9 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் சாக்ஷி.
Sakshi Agarwal
இவர் முதன் முதலில் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணியில்தான் துணைவேடத்தில் தோன்றியிருந்தார். பின்னர் யோகம், திருட்டு விசிடி போன்ற படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
அவ்வப்போது விதவிதமான போட்டோ சூட் நடத்தி லைக்குகளை குவித்து வரும் சாக்ஷி தற்போது உடைகளை அலங்கரிக்க பயன்படுத்தும் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உடை அணிந்து சூப்பர் கூல் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.