நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த பிப்ரவரி 19-ந் தேதி அதிகாலை மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறுதிச்சடங்கில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக நடிகர் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான எம்.எஸ்.பாஸ்கர், தன் நண்பனை இழந்த சோகத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் மயில்சாமி குறித்து பல்வேறு தகவல்களை எம்.எஸ்.பாஸ்கர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது : “மயில்சாமி கடைசியாக ஒரு 15 நாளைக்கு முன் பார்த்தேன். கடைக்கு போயிட்டு வரும்போது ரோட்ல பார்த்து பேசினேன். அப்போது என்ன மச்சான் உடம்பு சரியில்லையானு கேட்டேன். அதற்கு அவன், ஆமாடா ஹார்ட் அட்டாக்கு, டுவிங்னு ஒரு சவுண்ட கொடுத்தான்.
இதையும் படியுங்கள்... முயற்சித்தும் நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை..! வேதனையோடு டெல்லி கணேஷ் பகிர்ந்த தகவல்!
என்னடா இத இவ்ளோ கூலா சொல்றனு கேட்டேன். அதற்கு என்ன பண்றது, 3 முறை ஆபரேஷன் பண்ணிட்டேன். ஏதோ வருது போகுது விடுனு, அதையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு என்னிடம் பேசினான். ஹார்ட் அட்டாக் வந்திருச்சேனு துளியும் அவன் கவலைப்படவில்லை. வந்தான், இயல்பாக வாழ்ந்தான், எல்லோருக்கும் உதவினான், இயல்பாகவே போய்விட்டான், அவ்வளவுதான்.
19-ந் தேதி காலையில் சிவராத்திரி பூஜை முடிந்து 3.30 மணிக்கு வீட்டு வந்திருக்கான். அப்போது பசிக்குதுனு சொன்னதும், டிபன் கொடுத்திருக்காங்க, சாப்பிட்டதும் நெஞ்சுலயே நிக்குதுன்னு சொல்லிருக்கான். அப்புறம் வெந்நீர் கொடுத்துருக்காங்க. அதன்பிறகு நெஞ்சு வலிக்குதுனு சொன்னதும் பசங்க கார்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. அந்த தெரு முனை திரும்புவதற்குள் மகன் மடியிலேயே விழுந்து இறந்திருக்கிறான்” என எமோஷனலாக பேசி இருந்தார் எம்.எஸ்.பாஸ்கர்.
இதையும் படியுங்கள்... காந்தாரா 2-வில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்..? இயக்குனர் ரிஷப் ஷெட்டி கொடுத்த அல்டிமேட் ஹிண்ட்