கேரளாவை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.
இப்படம் வெற்றி அடைந்ததற்கு அஜித் - அனிகா இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதும் முக்கிய காரணம். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா.
இதன்பின் மள மளவென வளர்ந்துவிட்ட அனிகா, தற்போது ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இவர் தற்போது புட்ட பொம்மா என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கப்பேலா படத்தின் ரீமேக் ஆகும்.
இப்படத்திற்கு பின் மேலும் சில பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு விதமான போட்டோஷூட்களை நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் அனிகா.