பொன்னியின் செல்வன் ‘பூங்குழலி’யாக மாறி... தர்ஷா குப்தா நடத்திய கிளாமர் போட்டோஷூட்டுக்கு குவியும் லைக்ஸ்

First Published | Nov 21, 2022, 8:13 AM IST

பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலி கெட் அப்பில் நடிகை தர்ஷா குப்தா நடத்தியுள்ள போட்டோஷூட்டுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பேமஸ் ஆன பின் அதே பார்முலாவை பின்பற்றி ஏராளமான சின்னத்திரை நடிகைகள் சமூக வலைதளங்களில் பாப்புலர் ஆகினர்.

நடிகை தர்ஷா குப்தாவும் அந்த லிஸ்ட்டில் ஒருவர் தான். கோயம்புத்தூர் பெண்ணான இவர், கொரோனா ஊரடங்கு சமயத்தில் விதவிதமான கிளாமர் போட்டோஷூட்களை நடத்தி இளசுகளை கவர்ந்தார்.

Tap to resize

இதையடுத்து இவருக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி செந்தூரப்பூவே என்கிற சீரியலில் சைடு ரோலில் நடித்து வந்தார் தர்ஷா.

பின்னர் இவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் குக் வித் கோமாளி. அந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்ட தர்ஷா குப்தாவுக்கு அதன்மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானதோடு பட வாய்ப்புகளும் கிடைத்தன.

இதையும் படியுங்கள்... குழந்தை பிறந்த பின்னும் குறையாத மவுசு... கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா - கைவசம் இத்தனை படங்களா..!

அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் ருத்ரதாண்டவம். திரெளபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்து கவனம் ஈர்த்தார்.

தற்போது தர்ஷா குப்தா நடிப்பில் ஓ மை கோஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகை சன்னி லியோன் உடன் இணைந்து நடித்திருக்கிறார் தர்ஷா.

சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ், தர்ஷா குப்தாவின் ஆடையை கிண்டலடித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தர்ஷா குப்தாவும் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், நடிகை தர்ஷா குப்தா தற்போது பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலி கெட் அப்பில் படு கிளாமராக நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Nithya Menon: திருமணத்திற்கு முன்பே நித்யா மேனன் கர்ப்பமா? புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்ட நடிகை!

Latest Videos

click me!