நடிகை தமன்னா மும்பையை சேர்ந்தவர் என்றாலும், அறிமுகமானது ஹிந்தி திரைப்படங்கள் என்றாலும்... இவருக்கு அட்ரஸ் கொடுத்தது தமிழ் திரையுலகம் தான். முதல் படத்திலேயே முரட்டு வில்லியாக நடித்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். எனினும் சரியான படவாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடிய இவருக்கு, 2007 ஆம் ஆண்டு வெளியான கல்லூரி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், உலக அளவில் தமன்னாவுக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்றால் அது இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான, பாகுபலி திரைப்படம் தான். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், ஹிந்தி திரையுலகிலும் பிஸியானார் தமன்னா. எனினும் சமீப காலமாக, முன்னணி ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடிப்பதை விட, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பதையே விரும்புகிறார்.
திரைப்படங்களில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும், மற்றொரு புறம்... விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நீந்தியபடி தமன்னா சில புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.