தமிழ் சினிமாவில், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து... நடிப்பு திறமையை நிரூபித்து விட்ட தமன்னா, தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பு கூட கிடைக்காமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சில தமிழ் பட வாய்ப்புகளுக்கும் கொக்கி போட்டு வரும் தமன்னா... அவ்வப்போது விதவிதமான கிளாமர் உடையில், கண்களை கவரும் அழகில் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
திரைப்படங்களை தொடர்ந்து வெப் சீரிஸ் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா, தற்போது ஹிந்தியில் 'ஜீ கர்டா' என்கிற சீரிஸ் நடித்து முடித்துள்ளார். இந்த தொடர் விரைவில்... அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மியூசிக் ஆல்பம் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.