'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா, தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால், தமிழுக்கு டாட்டா காட்டி விட்டு தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்றார். இவரின் அதிஷ்டம், இவர் தெலுங்கில் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தது. வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் இவரை தற்போது தமிழில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அம்மணி கையிலும் அரை டஜன் படங்கள் உள்ளது. பாலிவுட் திரையுலகிலும் நடிக்க துவங்கிவிட்டார் ரெஜினா. இவரின் அசத்தல் புகைப்படங்கள் இதோ...