தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இதுவரை 50 படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளன. சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த "கோமாளி" படம் 100 நாட்கள் வரை ஓடி வெற்றி விழா கண்டது. நேற்று முன் தினம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற விழாவில் காஜல் அகர்வால் கட்டிவந்த பிங்க் நிற புடவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிம்பிளான புடவையில் ஆடம்பரம் இல்லாமல் காட்சியளித்த காஜல் அகர்வால் அழகு சிலை போல ஜொலித்தார். ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அந்த புடவையில் காஜல் அகர்வால், அழகான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.