பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர், தனது தாயைப் போல் சினிமாவில் ஒரு ஜொலிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் அறிமுகமாகி உள்ளார்.
குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குட்லக் ஜெர்ரி மற்றும் மிலி ஆகிய இரண்டும் படங்குமே கதாநாயகியை மையப்படுத்து எடுக்கப்பட்ட படங்கள்.
அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜான்வி நடிப்பில் வெளியான மிலி திரைப்படமும் ஒரு ரீமேக் படம் தான். இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஹெலன் என்கிற படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழிலும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அன்பிற்கினியாள் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.