Dharsha Gupta : கடற்கரையில் கவர்ச்சி புயலாக வலம் வந்த தர்ஷா குப்தா.... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ் இதோ

First Published | Mar 20, 2023, 2:58 PM IST

கடற்கரையோரம் நடிகை தர்ஷா குப்தா நடத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் இன்ஸ்டாகிராமில் இஷ்டத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசியதன் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர் வட்டமும் பெரிதானது. பின்னர் சீரியல்களில் நடிக்கத்தொடங்கிய தர்ஷாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷாவுக்கு அதன்பின் மக்கள் மத்தியில் செம்ம ரீச் கிடைத்ததோடு, சினிமாவிலும் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அந்த வகையில் தர்ஷா குப்தா முதன்முதலில் நடித்த திரைப்படம் ருத்ரதாண்டவம். மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா.

இதையும் படியுங்கள்... தங்கள் தரிசனம் கிடைக்குமா... குந்தவை திரிஷா உடன் டுவிட்டரில் chat செய்த வந்தியத்தேவன் கார்த்தி


இதையடுத்து சினிமாவிலும் கவர்ச்சி ரூட்டில் களமிறங்கிய தர்ஷா, அடுத்ததாக ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் கிளாமர் ரோலில் நடித்தார். இதில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தார் தர்ஷா. இதையடுத்து யோகிபாபு உடன் மெடிக்கல் மிராக்கிள் என்கிற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.

இவ்வாறு சினிமாவில் படிப்படியாக பிசியாகி வரும் தர்ஷா, போட்டோஷூட் நடத்துவதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையோரம் சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்தபடி நடிகை தர்ஷா குப்தா நடத்தியுள்ள போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தான் இவை.

இதையும் படியுங்கள்... படப்பிடிப்பில் தவறாக நடந்துகொண்டாரா யாஷ்? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த KGF நாயகி

Latest Videos

click me!