Aathmika Photos: கொசுவலை போன்ற சேலையில் செம்ம ஹாட்டாக கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..! அசைந்து போன ரசிகர்கள்..!

First Published | Jan 5, 2023, 12:55 PM IST

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகை ஆத்மிகா, செம்ம ஹாட்டாக சேலை கட்டி, கவர்ச்சிகரமான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இளம் நடிகைகள் சிலர், முதல் படத்திலேயே முதலுக்கு மோசம் இல்லாத வெற்றியை கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்கள் அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்து விடுவதில்லை.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, கதாநாயகனாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.

நாட்டாமை பட டீச்சர் போல் மாறி... சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய சாக்‌ஷி அகர்வால் - வைரலாகும் போட்டோஸ்

Tap to resize

இவர் நடித்த இந்த திரைப்படம் முதலுக்கு மோசம் இல்லாத அளவிற்கு வசூலை ஈட்டிய போதிலும், தற்போது வரை கோலிவுட் திரை உலகில், நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வரும் நடிகையாகவே உள்ளார்.

ஆத்மிகா தன்னுடைய முதல் படத்திற்கு பின்னர், மூன்று ஆண்டுகள் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில்... 2021 ஆம் ஆண்டு 'கோடியில் ஒருவன்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.

விஜய்யின் தாத்தா ஜெமினி கணேசனா?... வாரிசு டிரைலரில் இதை கவனிச்சீங்களா..!

'கோடியில் ஒருவன்' திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்ததாக இவர் நடித்து வெளியான 'காட்டேரி' திரைப்படத்திற்கும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது இவரின் கைவசம் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' மற்றும் 'நரகாசுரன்' ஆகிய படங்கள் உள்ளன.

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில், போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஆஷ் நிற புடவையில்... கவர்ச்சிக்கு குறைவில்லாத லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

அனோஷ்கா பிறந்த நாளில்... மகளுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி அஜித்! வைரல் போட்டோஸ்!

Latest Videos

click me!