கொரோனா ஊரடங்கால் பலருக்கும் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் திரைத்துறையினரும் கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டு வருகின்றனர். சமீபத்தில் தனுஷின் அக்கா கார்த்திகா தங்களது குடும்ப புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். தனுஷின் அப்பா , அம்மா , அண்ணன் செல்வராகவன், அக்காக்கள் விமலா, கார்த்திகா, மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்கா, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, அக்கா கணவர்கள் மற்றும் குழந்தைகள் என ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தபோது எடுத்த அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அத்துடன் சேர்த்து தனுஷ் வீட்டில் இருக்கும் போது எப்படி ஜாலியாக பொழுதை கழிக்கிறார், மகன்களுடன் எப்படி கொஞ்சி விளையாடுகிறார் போன்ற புகைப்படங்களையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். வீட்டில் ஜாலியாக நேரத்தை செலவிடும் தனுஷின் சூப்பர் கிளிக்ஸ் இதோ...!