இந்த அறிவிப்பில் மொத்தம் மூன்று முக்கியப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. Exhibition Assistant 'A': இந்தக் காலியிடத்துக்கு விண்ணப்பிக்க, விஷுவல் ஆர்ட் / ஃபைன் ஆர்ட்ஸ் / கமர்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம் (Graduate) பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
மாதச் சம்பளம்: ₹59,600/-
2. Technician 'A': பத்தாம் வகுப்பு (SSC/10th) தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் (கார்பென்ட்ரி/ ஃபிட்டர்/ எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல்) ஐ.டி.ஐ (ITI) சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். சான்றிதழின் கால அளவைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை பணி அனுபவம் தேவை.
காலியிடங்கள்: 06
மாதச் சம்பளம்: ₹38,908 /-
3. Office Assistant (Gr.III): இந்தப் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். அத்துடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் என டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 05
மாதச் சம்பளம்: ₹38,908/-