மீன்வளம் மற்றும் அதுசார்ந்த துறைகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு! நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மீன்வள அறிவியல், பொறியியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் உங்கள் எதிர்காலத்தை கட்டமைக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்.
24
பல்வேறுபட்ட பட்டப்படிப்புகள் மற்றும் இடங்கள்!
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் பலதரப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது. பி.எஃப்.எஸ்ஸி. (மீன்வள அறிவியல்) நான்கு வருடப் படிப்புக்கு தூத்துக்குடி, பொன்னேரி, தலையாயநல்லூர் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள கல்லூரிகளில் மொத்தம் 410 இடங்கள் உள்ளன. பி.டெக். (மீன்வளப் பொறியியல்) படிப்புக்கு நாகப்பட்டினம் வளாகத்தில் 40 இடங்களும், சுயநிதி முறையில் பி.டெக். (உயிரி தொழில்நுட்பம்) படிப்புக்கு சென்னையில் 42 இடங்களும், பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம்) படிப்புக்கு சென்னையில் 41 இடங்களும் உள்ளன. மேலும், பி.பி.ஏ. (மீன்வள நிறுவன மேலாண்மை), பி.வோக். (மீன்வளத் தொழில்நுட்பம்), பி.வோக். (அக்வாகல்ச்சர் தொழில்நுட்பம்) மற்றும் பி.வோக். (தொழில்துறை மீன்பிடித் தொழில்நுட்பம்) போன்ற சுயநிதிப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
34
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்!
இந்த இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூன் 2, 2025 அன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி, ஜூன் 27, 2025 அன்று மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://www.admission.tnjfu.ac.in/] மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள்/சான்றிதழ்களை பதிவேற்றி, கடைசி தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். கடின நகல்களை அனுப்பத் தேவையில்லை.
மாணவர் சேர்க்கை குறித்த விரிவான தகவல்கள், தகுதி நிபந்தனைகள், தேர்வு முறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR), மீனவர் வாரிசுகள், பிற மாநில ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) / அவர்களின் வாரிசுகள் / NRI ஆதரவளிப்போர் மற்றும் வெளிநாட்டு நாட்டினருக்கான ஒதுக்கீடு, மேலாண்மை ஒதுக்கீடு போன்ற இட ஒதுக்கீடுகள் பற்றிய தகவல்களைப் பெற, (https://www.admission.tnjfu.ac.in/) என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்!