சட்டம் படிச்சி ஒரு கலக்கு கலக்க ஆசையா? அம்பேத்கர் சட்டப் பல்கலையில் முதுகலை சட்டப் படிப்பு:அட்மிஷன் ஆரம்பம்

Published : Jul 19, 2025, 11:35 PM IST

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் LL.M படிப்புக்கு விண்ணப்பங்கள் தொடங்கின. 13 பிரிவுகளில் 2 ஆண்டு முதுகலை சட்டப் படிப்பு. கட்டண விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை! கடைசி தேதி ஆகஸ்ட் 16, 2025.

PREV
15
முதுகலை சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இரண்டு ஆண்டு LL.M முதுகலை சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 16, 2025 அன்று தொடங்கியுள்ளது. சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், தங்களது சட்ட அறிவை மேம்படுத்திக்கொள்ளவும், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெறவும் இந்த முதுகலை படிப்பு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

25
13 வகையான சிறப்புப் பிரிவுகளில் LL.M படிப்பு!

மாநில அரசின் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் மொத்தம் 13 வகையான சட்டப் பிரிவுகளில் முதுகலை சட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. அவற்றில் வணிக சட்டம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட ஒழுங்கு, அறிவுசார் சொத்துரிமைச் சட்டம், சர்வதேச சட்டம் மற்றும் அமைப்பு, சுற்றுச்சூழல் சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம், மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி, தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாக சட்டம், வரி விதிப்பு சட்டம், சைபர் ஸ்பேஸ் – சட்டம் மற்றும் நீதி, கடல்சார் சட்டம், சொத்து சட்டம், குற்றம் மற்றும் தடயவியல் சட்டம் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு சட்டப்பிரிவிலும் 20 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்படும்.

35
கல்வித்தகுதி மற்றும் படிப்பு கால அளவு

LL.M முதுகலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 3 அல்லது 5 ஆண்டு இளங்கலை சட்டப் படிப்பை (B.L./LL.B) குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேலும், 10+2+3 அல்லது 10+3+3 என்ற கல்வி முறையில் படித்திருக்க வேண்டும். இந்த முதுகலை சட்டப் படிப்பு 2 வருட கால அளவைக் கொண்டது. இது CBCS முறையில் ஒவ்வொரு வருடமும் 2 செமஸ்டர் தேர்வுகளுடன் நடைபெறும். ஒரு செமஸ்டர் 90 வேலை நாட்களைக் கொண்டிருக்கும்.

45
கட்டண விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

LL.M படிப்புக்கான கட்டண விவரங்கள் பின்வருமாறு:

முதல் ஆண்டு: கல்வி கட்டணம், அட்மிஷன், நூலகம், இணைய கட்டணம், விளையாட்டு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.38,200 செலுத்த வேண்டும்.

இரண்டாம் ஆண்டு: அட்மிஷன் மற்றும் நூலக வைப்புத் தொகை இல்லாத காரணத்தினால், மொத்தம் ரூ.32,000 செலுத்த வேண்டும்.

55
விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://tndalu.ac.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, அட்மிஷன் பக்கத்தில் உள்ள 'சீர்மிகு சட்டப் பள்ளி' பிரிவின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக இதர பிரிவினர் ரூ.1,000 செலுத்த வேண்டும். பட்டியல் சாதி (SC) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதுமானது. விண்ணப்பப் பதிவு ஜூலை 16 அன்று தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 16, 2025 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-24641919 அல்லது 24957414 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories