5000 காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Nov 14, 2024, 09:27 AM ISTUpdated : Nov 14, 2024, 09:37 AM IST

தமிழக அரசு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி 5ஆயிரம் காலிபணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு நடைபெற இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

PREV
15
5000 காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
job alert

தமிழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு பணியில் காலியாக உள்ள 75ஆயிரம் பணி இடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வும் அறிவிக்கப்பட்டு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு  இளைஞர்களை தயார் படுத்தும் வகையில் இலவச பயிற்சியும் அரசு சார்பாக வழங்கப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் படி  வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

25
job in chennai

தனியார் துறையில் வேலைவாய்ப்பு

இதனால் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகி வருகிறது.  இதனால் இந்த பணியிடங்கள் இளைஞர்களுக்கு சரிவர சேர வேண்டும் என்ற காரணத்தால் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் மட்டும் சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்பப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்கான உறுதி சான்றிதழை பெற்றுள்ளனர். இந்த நிலையில் வருகிற 16ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாகஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

35
job fair

திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 16,11,2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஸ்ரீ விஜய்சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (தருமபுரி மெயின் ரோடு) திருப்பத்தூர்-635 601 வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

45
private job

சிறப்பு அம்சங்கள்

100 க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

5000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக சுயதொழில் வழிகாட்டுதல்கள்

அனுமதி இலவசம்

55
job fair

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ டிப்ளமோ நர்சிங் பார்மஸி, பொறியியல்

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருப்பத்தூர்.

தொடர்பு கொள்ள 04179-222033

தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories