திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி 2025 இளங்கலை சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு. சிறப்பு ஒதுக்கீடு ஜூன் 2, பொது கலந்தாய்வு ஜூன் 4-9. தேவையான ஆவணங்கள், கட்டண விவரங்கள் உள்ளே.
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 2025-2026 கல்வி ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு, 2025 ஜூன் 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும்.
210
வேண்டிய ஆவணங்கள்
இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்: சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்று, 10, +1, +2 மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச்சான்றிதழ் (T.C.), வருமானச் சான்று, சாதிச் சான்று, அரசுப் பள்ளி (6 முதல் 12 ஆம் வகுப்பு வரை) உறுதிச் சான்று (BONAFIDE CERTIFICATE), ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம், EMIS எண், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பத்தின் அச்சு நகல். இந்த அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் மூன்று நகல்கள் தேவைப்படும்.
310
பொது கலந்தாய்வு தேதிகள்: பாடப்பிரிவு வாரியாக
பொது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 4, 5, 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு தொடங்கும்.
ஜூன் 4, 2025 அன்று: தமிழ், ஆங்கிலம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
510
பொது கலந்தாய்வு தேதிகள்: பாடப்பிரிவு வாரியாக
ஜூன் 5, 2025 அன்று: கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
610
பொது கலந்தாய்வு தேதிகள்: பாடப்பிரிவு வாரியாக
ஜூன் 6, 2025 அன்று: தாவரவியல், வரலாறு, விலங்கியல், புவியமைப்புயியல் (Geology) பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
710
பொது கலந்தாய்வு தேதிகள்: பாடப்பிரிவு வாரியாக
ஜூன் 9, 2025 அன்று: சமூகவியல், மனிதவள மேம்பாடு, இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல், பொருளியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
810
தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் கட்டண விவரங்கள்
பொது கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் மூன்று நகல்கள்): 10, +1, +2 மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச்சான்றிதழ் (T.C.), வருமானச் சான்று, சாதிச் சான்று, அரசுப் பள்ளி (6 முதல் 12 ஆம் வகுப்பு வரை) உறுதிச் சான்று (BONAFIDE CERTIFICATE), ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம், EMIS எண், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பத்தின் அச்சு நகல்.
910
கல்விக் கட்டணம் பின்வருமாறு:
கலைப் பாடப்பிரிவுகளுக்கு: ரூ. 2849
அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு: ரூ. 2869
கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு: ரூ. 1969
1010
கலந்தாய்வு தேதி
மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த கலந்தாய்வு தேதிகளைக் குறித்துக்கொண்டு, உரிய நேரத்தில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.