பிரசார் பாரதி நிறுவனத்தில் 421 டெக்னிக்கல் இன்டர்ன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 சம்பளம். ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கவும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, திறமையான இளம் பொறியாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 421 டெக்னிக்கல் இன்டர்ன்ஸ் (Technical Interns) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யும் முறை குறித்த முழு விவரங்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தொடர்புடைய பொறியியல் பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் (Bachelor’s or Master’s Degree in Engineering in relevant streams) பெற்றிருக்க வேண்டும். 2024-25 கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடித்த புதிய பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகள் ஆகியோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்களின் வயது 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இந்த மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்த வித விண்ணப்பக் கட்டணமும் கிடையாது. தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தேதி மற்றும் முறை குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
55
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ இணையதளமான (https://prasarbharati.gov.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனத்தில் உங்கள் பணியைத் தொடங்கலாம்.