புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம், இளங்கலை, முதுகலை மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கான சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. UGC-DEB அங்கீகாரம் பெற்ற இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31, 2025 கடைசி தேதியாகும்.
உயர்கல்வி இனி உங்கள் கைகளில்!
தொலைநிலைக் கல்வி மூலம் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற உங்கள் கனவு நனவாக புதுச்சேரி பல்கலைக்கழகம் வாய்ப்பு அளிக்கிறது. வேலைக்குச் சென்று கொண்டே படிக்க விரும்புபவர்கள், குடும்பப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த படிப்புகளில் சேர்ந்து பயனடையலாம்.