Job Alert: 12th முடித்துள்ளவர்களுக்கு ரூ.70,000 சம்பளம்.! அரசு வேலைக்கு விண்ணப்பிக்க மறக்க வேண்டாம்!

Published : Dec 16, 2025, 07:31 AM IST

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையில் 41 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

PREV
16
இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தமிழக அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது. தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வோ, நேர்காணலோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக பணிநியமனம் வழங்கப்பட உள்ளது.

26
சமூகப் பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடுகளும் உண்டு

இந்த அறிவிப்பின் மூலம் கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தமாக 41 பணியிடங்கள் உள்ளன. பொதுப் பிரிவு, பிசி, பிசி (எம்), எம்பிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு தரப்பினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

36
வயது வரம்பு இதுதான்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 42, முன்னாள் ராணுவத்தினருக்கு 48 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியினர் மற்றும் பிற ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.

46
12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

கல்வித் தகுதியாக விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம் அவசியமாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற பணிகளைச் செய்யும் திறன், நல்ல உடல் நலம் மற்றும் கண் பார்வை இருக்க வேண்டும்.

56
சம்பளத்தை கேட்ட மயக்கமே வரும்

முக்கியமாக, இந்த பணிக்கு தேர்வும் நேர்காணலும் இல்லை. 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

66
உடனே விண்ணப்பிக்க வேண்டும்

அரசு வேலை, நல்ல சம்பளம், எளிய தேர்வு முறை – இவை அனைத்தும் ஒரே அறிவிப்பில் கிடைப்பதால், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories