சாட்ஜிபிடி மூலம் எந்த மொழியையும் ஈசியா கத்துக்கலாம்! செலவே கிடையாது!!

First Published | Nov 21, 2024, 4:07 PM IST

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது நேரத்தையும் பணத்தையும் அதிக முதலீடு செய்வதாகும். ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், குறிப்பாக ChatGPT போன்ற சாட்பாட்களின் வருகையால் புதிய மொழியைக் கற்பது எளிமையாகிவிட்டது.

ChatGPT

புதிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்ள உதவும் பிரத்யேகமான செயலிகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை கட்டணம் செலுத்த வேண்டியவை. ஆனால், ChatGPT இலவசமாகவே புதிய மொழியைக் கற்க உதவுகிறது. நீங்கள் ChatGPT பயனராக இருந்தால், புதிய மொழியில் தேர்ச்சி பெற சாட்போட் பயன்படுத்தலாம். அது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்

ChatGPT for learning

உங்களிடம் செயல் திட்டம் இல்லையென்றால் புதிய திறன்களைப் பெற முடியாது. ஆனால், ChatGPT இல் தனிப்பட்ட மொழி கற்றல் திட்டத்தை உருவாக்கி பயன்படுத்தலாம்.

Latest Videos


ChatGPT for education

எந்தவொரு மொழியையும் கற்க வார்த்தைகள்தான் முக்கியம். வார்த்தைகள், இலக்கணம் மற்றும் நிறுத்தற்குறிகள் இல்லாமல் ஒரு மொழியைப் பயன்படுத்த முடியாது. இலக்கணத்தைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலுடன், வார்த்தைகளைத் தெரிந்துகொள்வது, அவை பயன்படும் இடங்களை அறிந்துகொள்வது மொழியைக் கற்க உதவும்.

OpenAI ChatGPT

எந்த மொழியைக் கற்க விரும்பினாலும், இலக்கணப் பயிற்சி மிகவும் முக்கியமானது. இலக்கண வடிவங்களைப் புரிந்துகொள்வதும் நடைமுறையில் பயன்படுத்துவதும் அவசியம். இதுதான் தெளிவாகப் பேசவும், திறம்பட எழுதவும், படிப்பதையும் கேட்டதையும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

ChatGPT

ஒரு புதிய மொழியைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவதற்கு அந்த மொழியின் கலாச்சாரத்தை நன்கு அறிய வேண்டும். பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் பற்றி அறிந்துகொள்வது மொழியைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்க்க உதவும். மொழியை விரைவாகக் கற்றுக்கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும்.

ChatGPT

கற்க விரும்பும் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் பேசி பயிற்சி பெறுவது அந்த மொழியில் திறமையை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். வார்த்தைகளை உச்சரித்துக் காட்ட யாராவது உங்களுக்கு உதவ வேண்டும். ChatGPT சாட்போட் உங்கள் தனிப்பட்ட உச்சரிப்பு பயிற்சியாளராகவும் செயல்படும். இதுவும் நீங்கள் மொழியைக் கற்பதை விரைவுபடுத்தும்.

ChatGPT

சமீபத்தில், OpenAI இணைய பயனர்களுக்காக ChatGPT இன் மேம்பட்ட வாய்ஸ் பயன்முறையை (Advanced Voice Mode) வெளியிட்டது, இது முன்பு மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பில் மட்டுமே இருந்தது. இந்த அம்சம் தற்போது ChatGPT கட்டணச் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

click me!