கரூர் வைஸ்யா வங்கியில் சூப்பர் வாய்ப்பு! ரூ.30,000 சம்பளத்தில் வேலை! தேர்வே இல்ல!

Published : May 12, 2025, 11:59 PM IST

கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager வேலை வாய்ப்பு! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை! கவர்ச்சியான சம்பளம். உடனே விண்ணப்பிக்கவும்! 

PREV
16
கரூர் வைஸ்யா வங்கியில் பணி

கரூர் வைஸ்யா வங்கியில் (KVB) Relationship Manager (விற்பனை) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஒரு சூப்பர் சான்ஸ்! ஏன்னா, இந்த வேலைக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாதாம்! நீங்க நேரடியா இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி வேலைக்குப் போகலாம். மாசம் ரூ.30,000 சம்பளம் வாங்கலாம்!

கரூர் வைஸ்யா வங்கி தமிழ்நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்று. இங்க வேலை கிடைச்சா உங்க கரியர் வேற லெவல்ல இருக்கும். இப்ப Relationship Manager பதவிக்கு நிறைய ஆட்களை எடுக்கப் போறாங்க.

26
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

நீங்க ஏதாவது ஒரு டிகிரி முடிச்சிருக்கணும். அதுவும் ரெகுலர்ல படிச்சு குறைஞ்சது 60% மார்க் எடுத்திருந்தா போதும். அங்கீகரிக்கப்பட்ட யூனிவர்சிட்டி அல்லது காலேஜ்ல படிச்சிருக்கணும். முதுகலைப் பட்டம் வச்சிருக்கவங்களும் அப்ளை பண்ணலாம். வயசு 18ல இருந்து 40க்குள்ள இருக்கணும்.

36
சம்பளம் எவ்வளவு கொடுப்பாங்க?

சம்பளம் மாசம் ரூ.30,000/- தர்றாங்க. இது உங்க திறமைக்கும் அனுபவத்துக்கும் ஏத்த மாதிரி இன்னும் அதிகமாகவும் வாய்ப்பிருக்கு.

விண்ணப்பக் கட்டணம் உண்டா?

நல்ல விஷயம் என்னன்னா, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்க ஒரு ரூபா கூட கட்டத் தேவையில்லை! எல்லாரும் இலவசமா அப்ளை பண்ணலாம்.

46
எப்படி செலக்ட் பண்ணுவாங்க?

உங்களை எப்படி தேர்ந்தெடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ ப்ராசஸ்:

1. முதல்ல நீங்க ஆன்லைன்ல ரெஜிஸ்டர் பண்ணனும்.

2. அப்புறம் உங்களுக்கு பர்சனல் இன்டர்வியூ அல்லது வீடியோ கால் மூலமா இன்டர்வியூ நடக்கும்.

3. நீங்க செலக்ட் ஆயிட்டா உங்களுக்கு வேலைக்கான ஆஃபர் லெட்டர் வரும்.

4. அதுக்கப்புறம் உங்க பேக்ரவுண்ட் எல்லாம் செக் பண்ணுவாங்க. மெடிக்கல் டெஸ்ட் இருக்கும்.

5. எல்லாம் சரியா இருந்தா நீங்க வேலையில சேர்ந்துக்கலாம்!

56
எப்படி விண்ணப்பிப்பது? ரொம்ப ஈஸி!

நீங்க உடனே கரூர் வைஸ்யா வங்கியோட அதிகாரப்பூர்வ வெப்சைட்டான www.karurvysyabank.co.in க்கு போங்க. அங்க ஆன்லைன்ல அப்ளை பண்றதுக்கான லிங்க் இருக்கும். அதை கிளிக் பண்ணி உங்க டீடைல்ஸ் எல்லாம் ஃபில் பண்ணிடுங்க. இல்லன்னா, நாங்க கீழே கொடுத்திருக்க லிங்க்கை கிளிக் பண்ணியும் அப்ளை பண்ணலாம்.

66
முக்கியமா ஒரு விஷயம்!

முக்கியமா ஒரு விஷயம்! நீங்க அப்ளை பண்றதுக்கு முன்னாடி, அவங்க அபிஷியல் நோட்டிபிகேஷன்ல கொடுத்திருக்க எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கான்னு நல்லா செக் பண்ணிக்கோங்க. இந்த சூப்பரான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! உடனே அப்ளை பண்ணுங்க! உங்க கரியரை ஒரு நல்ல இடத்துக்கு கொண்டு போங்க! ஆல் தி பெஸ்ட்!

Read more Photos on
click me!

Recommended Stories