ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) PhD சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 2025-26 கல்வி ஆண்டிற்காக தொடங்கியுள்ளது. NET, JRF, அல்லது GATE மதிப்பெண்கள் மூலம் ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான PhD படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (jnuee.jnu.ac.in) பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.
28
கடைசி தேதி
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 7, 2025 இரவு 11:50 மணி வரை ஆகும். மாணவர்கள் தகுதியின் அடிப்படையில், JRF, NET, அல்லது GATE மதிப்பெண்கள் வழியாக விண்ணப்பிக்க மூன்று விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
38
விண்ணப்ப செயல்முறை மற்றும் தகுதிகள்
விண்ணப்பதாரர்கள், JRF, NET அல்லது GATE போன்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாடங்களில் கல்வித் தகுதி மட்டும் இருந்தால் விண்ணப்பிக்க முடியாது என அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முன், பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள e-Prospectus-ஐ கவனமாகப் படித்து, தகுதி அளவுகோல்கள், இருக்கை கிடைக்கும் தன்மை மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் NET, JRF மற்றும் GATE (பொறியியல் பள்ளிக்கு மட்டும்) ஆகியவற்றிற்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
58
முக்கிய தேதிகள் மற்றும் தேர்வுகள்
விண்ணப்பதாரர்கள் ஜூலை 8 மற்றும் 9, 2025 ஆகிய தேதிகளில் தங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் திருத்தங்களைச் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். வாய்வழித் தேர்வுகளுக்கான அழைப்பிதழ்கள் ஜூலை 18, 2025-க்குள் அனுப்பப்படலாம். நேர்காணல்கள் ஜூலை 25 முதல் 31, 2025 வரை நடத்தப்படும்.
68
முதல் தகுதிப் பட்டியல்
முதல் தகுதிப் பட்டியல் ஆகஸ்ட் 11, 2025 அன்று வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து பதிவு மற்றும் கட்டணச் செலுத்துதல் ஆகஸ்ட் 11 முதல் 13 வரை நடைபெறும். இரண்டாம் தகுதிப் பட்டியல் ஆகஸ்ட் 29, 2025-ல் வெளியாகும். தேவைப்பட்டால், மூன்றாவது மற்றும் இறுதிப் பட்டியல் செப்டம்பர் 15, 2025 அன்று வெளியிடப்படும். சேர்க்கை மற்றும் பதிவுக்கான இறுதி காலக்கெடு செப்டம்பர் 30, 2025 ஆகும்.
78
கல்வித் தகுதிகள் மற்றும் சலுகைகள்
PhD சேர்க்கைக்கு, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். 4-ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்குப் பிறகு 1-ஆண்டு முதுகலைப் பட்டம் அல்லது 3-ஆண்டு இளங்கலைக்குப் பிறகு 2-ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அவசியம். அல்லது M.Phil படிப்பை 55% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
88
UGC விதி
4-ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்புக்கு பிறகு விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். UGC விதிகளின்படி, SC/ST/OBC/PWD/EWS போன்ற பிரிவினருக்கு மதிப்பெண்களில் 5% தளர்வு அளிக்கப்படும்.