சொந்த ஊரிலே வேலை! அரசு வங்கிகளில் 5208 IBPS PO காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

Published : Jul 02, 2025, 08:05 AM IST

ஐபிபிஎஸ் வங்கிகளில் 5208 PO காலியிடங்களை அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.48,480 சம்பளத்தில் ஜூலை 1 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம்.

PREV
17
காத்திருந்தவர்களுக்கு அடித்தது யோகம்!

வங்கித் துறையில் ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது! வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 Probationary Officer/Management Trainee (PO/MT) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை எந்த ஒரு பட்டதாரியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

27
சம்பளம், காலியிடங்கள் மற்றும் தகுதிகள்!

இந்த PO/MT பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் கிடைக்கும். மொத்தம் 5208 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு பட்டப்படிப்பையும் முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 

37
வங்கி வாரியான காலியிடங்கள்:

பேங்க் ஆஃப் பரோடாவில் 1000 காலியிடங்களும், பேங்க் ஆஃப் இந்தியாவில் 700 காலியிடங்களும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 1000 காலியிடங்களும், கனரா வங்கியில் 1000 காலியிடங்களும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 500 காலியிடங்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 450 காலியிடங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 200 காலியிடங்களும், பஞ்சாப் & சிந்து வங்கியில் 358 காலியிடங்களும் உள்ளன. மொத்தம் 5208 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

47
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை!

விண்ணப்பக் கட்டணம் SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.175/- ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.850/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Preliminary Examination (Objective Test), Main Examination (Objective and Descriptive), Personality Test, மற்றும் Interview ஆகிய படிநிலைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

57
வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

67
முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை!

விண்ணப்பங்கள் 01.07.2025 அன்று தொடங்கி 21.07.2025 அன்று முடிவடைகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் IBPS இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ibps.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

77
விண்ணப்பிக்கும் முன்

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல், வங்கியில் ஒரு நிலையான பணியைப் பெற்று உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories