DRDO jobs
டிஆர்டிஓ (DRDO) என்பது பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பல ஆய்வகங்கள் மற்றும் அலகுகளைக் கொண்ட ஒரு முன்னணி ஆராய்ச்சி அமைப்பாகும், விமானம், ஆளில்லா விமானம், தகவல்தொடர்பு அமைப்புகள், ரேடார். மின்னணு போர் உபகரணங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறது.
DRDO Recruitment
டிஆர்டிஓவில் வேலை பெற, விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பின்வரும் தகுதிகள் பொதுவாக எதிர்பார்க்கப்படுபவை.
விஞ்ஞானி அல்லது பொறியாளர் பணிக்கு, தொழில்நுட்பத் துறையில் இளங்கலை பட்டம் (BE/B.Tech) அல்லது அறிவியல் துறையில் முதுகலை பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும். விண்வெளி பொறியியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், இயந்திர பொறியியல், ரசாயன பொறியியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக பதவிகளுக்கு மேலாண்மை, மனித வளம் அல்லது நிதித்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிகளுக்கு, வெவ்வேறு துறைகளில் பட்டதாரியாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு இருக்கும். சில பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதே போதுமானதாக இருக்கலாம்.
DRDO vacancies
விண்ணப்பதாரர்கள் DRDO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (drdo.gov.in ) சென்று வேலை அறிவிப்புகளைப் பார்க்கலாம். தற்போதைய காலிப் பணியிடங்கள், பற்றிய தகவல்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.
டிஆர்டிஓவில் பெரும்பாலான வேலைவாய்ப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கணக்கு தொடங்கி, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
பல வேலைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இந்தக் கட்டணத்தில் சலுகைகள் மற்றும் தளர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அதுகுறித்த விவரங்களை அறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.
DRDO opportunities
டிஆர்டிஓ (DRDO) நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை வேலையைப் பொறுத்து மாறுபடலாம். இருப்பினும், பொதுவாக, எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பெரும்பாலான தொழில்நுட்ப பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு சம்பந்தப்பட்ட பாடங்களில் விண்ணப்பதாரர்களின் திறன், பொது அறிவு ஆகியவற்றை மதிப்பிடுவதாக இருக்கும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்விப் பின்னணி, ஆராய்ச்சியில் ஆர்வம் முதலியவை குறித்து மூத்த விஞ்ஞானிகளுடன் விவாதிக்கத் தயாராக இருக்கவேண்டும்.
DRDO Scientist
டிஆர்டிஓவில் வேலை கிடைத்தால் பல நன்மைகளைப் பெறலாம். DRDO ஒரு அரசு அமைப்பாக இருப்பதால், நிலையான வேலைக்கான உத்தரவாதமாக இருக்கும். கவர்ச்சிகரமான சம்பளத்துடன் அரசாங்க விதிமுறைகளின்படி கூடுதல் பலன்களும் கிடைக்கும்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களில் பங்கெடுகுகம் அனுபவத்தைப் பெறலாம். அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கான பங்களிப்பையும் வழங்கலாம்.