CUET PG 2026 தேர்வுக்கான நகர அறிவிப்பு வெளியானது. exams.nta.nic.in இணையதளத்தில் டவுன்லோட் செய்வது எப்படி மற்றும் முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை (PG) படிப்புகளில் சேருவதற்கான 'கியூட்' (CUET PG 2026) நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் விரைவில் தொடங்கவுள்ளது. தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான 'தேர்வு நகர அறிவிப்பு சீட்டு' (City Intimation Slip) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
25
CUET PG 2026: தேர்வு நகர அறிவிப்பு (City Intimation Slip) வெளியானது!
CUET PG 2026 தேர்வுகள் வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளன. மற்ற தேதிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நகர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என NTA தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்களுக்கு எந்த நகரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள இந்த அறிவிப்பு உதவும்.
35
எப்படி டவுன்லோட் செய்வது? இது அட்மிட் கார்டா?
மாணவர்கள் nta.ac.in அல்லது exams.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று, தங்களது அப்ளிகேஷன் எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய லாகின் (Login) விவரங்களைப் பயன்படுத்தி இந்த சிட்டி சிலிப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
அதேநேரம், தேசியத் தேர்வு முகமை மாணவர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டலை வழங்கியுள்ளது. இந்த 'City Intimation Slip' என்பது உங்களின் அட்மிட் கார்டு (Admit Card) அல்ல. தேர்வு மையம் அமைந்துள்ள நகரத்தை முன்கூட்டியே மாணவர்களுக்குத் தெரிவிப்பதற்கான ஒரு அட்வான்ஸ் தகவல் மட்டுமே இது. இதன் மூலம் வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள முடியும்.
அட்மிட் கார்டு எப்போது வெளியாகும்? தேர்வு விவரங்கள் என்ன?
உண்மையான தேர்வு மையம் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட அட்மிட் கார்டுகள் (Hall Tickets), தேர்வுக்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பாக மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே மாணவர்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் கண்காணிப்பது அவசியம்.
இந்த ஆண்டு CUET PG 2026 தேர்வுக்காக சுமார் 4,11,366 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 157 பாடப்பிரிவுகளுக்கு, 44 ஷிப்டுகளாக (Shifts) தேர்வுகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு தேர்வுக்கும் 90 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும் (சில மொழித் தாள்கள் மற்றும் சிறப்புப் பாடங்கள் தவிர்த்து).
55
சந்தேகங்களுக்கு யாரைத் தொடர்புகொள்வது?
தேர்வு நகர அறிவிப்பை டவுன்லோட் செய்வதிலோ அல்லது லாகின் செய்வதிலோ ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொண்டால், மாணவர்கள் உடனடியாக 011-40759000 என்ற உதவி மைய எண்ணைத் தொடர்புகொள்ளலாம். அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற இமெயில் முகவரிக்கு மெயில் அனுப்பியும் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.